Saturday, August 23, 2008
விலைதான் அமோக விளைச்சலடைகிறது.
25.07.08
சென்னை
அன்புள்ள அப்பாவுக்கு,
நான் நலம் வீட்டில் எல்லோரும் நலமா . அடுத்த மாதத்திலிருந்து எனக்கு 1000 ருபாய் கூடுதலாய் அனுப்பு நீ அனுப்பு 1500 ருபாயைக் கொண்டு இங்கே சென்னையில் ஒன்றும் செய்வதற்கில்லை. இரண்டு ஆண்டுக்கு முன்பு நான் கலேஜல் சேர்நத போது எவ்வளவு பணம் அனுப்பினாயோ அதே அளவு இப்போதும் அனுப்பினால் எப்படி. 1.50க்கு விற்ற இட்லி 2.50 ஆயாச்சு, 3 ருபாயிருந்த பரோட்டடா 5 ருபாயாயாச்சு 6க்கு விற்ற துணிச்சோப்பு 10 ஆயாச்சு 500 வாடகை 2000 ஆயாச்சு ஆனால் நீ கொடுக்கும் காசுமட்டும் அதே 1500ஆகவே இருக்கிறது நான் என்ன செய்யட்டும். கூடப்படிக்கும் பசங்கள் எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறhர்கள் நான் இவர்களையெல்லாம் பார்த்து கூச்சபட்டு போகிறேன் எனக்கு ஒரு செல்போன் வாங்க காசு சேர்த்து அனுப்பிவை.
இப்படிக்கு
சிலம்பு
01.08.08
சித்தக்கூர்,
அன்பு மகன் சிலம்புவுக்கு,
அப்பா எழுதிக் கொள்வது இங்கு எல்லோரும் சுகம் உன் சுகத்தை பார்த்துக்கொள் . கடிதம் கண்டேன் வருத்தமாக இருந்தது பொருத்துக் கொள் அடுத்த மாதம் கூடுதல் பணம் அனுப்ப முயற்சிக்கிறேன். யாரையும் கண்டு ஒதுங்கி ஓடாதே அவர்களைப்போல் நாம் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள். நாம் படிக்க போயிருப்பது நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ள நீ உன் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு உனக்கானதை தேடிக் கொள்வாய் பின் எல்லாவற்றையும் தேடிக் கொள்வாய் என்று தான் படிக்க அனுப்பியிருக்கிறேன். செல்போன் இல்லை என்பது ஒன்றும் குறையில்லை யாராவது கேட்டால் சொல் இன்னும் தமிழ்நாட்டில் செல்போன் சிக்னல்கள் கிடைக்காத கிராமங்களும் இருக்கின்றன என்று, கிராமங்களுக்கு வந்து சேராதது செல்போன் சிக்னல் மட்டுமில்லை என்று நீ மனதில் வைத்துக் கொள். இரண்டு வருடத்திற்கு முன்பு 3 ருபாய்க்கு வாங்கிய கத்தரிக்காயை இன்றும் 3க்கு தான் வாங்குகிறhர்கள், 5ருபாய்க்கு வாங்கிய முருங்கைக்காய் இன்றும் 5ருபாய் தான் அன்று கூலி 80 ருபாய் இன்று அரிசியோடு சேர்த்து கூட்டினால் 80 தான் வருகிறது, அரிசி தான் மிச்சம். நம் நாட்டில் விலைதான் அமோக விளைச்சலடைகிறது. உடம்பை பார்த்துக் கொள்.ஆறhம்தேதி பணம் அனுப்புகிறேன்.
பாசத்துடன்
ராக்கன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment