
வைகோ தமிழகத்தின் பேச்சு புயல் அனல் தெறிக்கும் ஆற்றல் படைத்த அரசியல் வாதி மக்கள் செல்வாக்கில் கருணாநிதியையே ஓரம் கட்டிவிடுவார் என்று எதிர்பார்த்த வைகோ
கருணாநிதியால் திமுகவிலிருந்து படாடோபமாக வெளியேற்றப்பட்டார் இனி திமுகவின் கதி அதோ கதி என்று தமிழகமே எதிர்பார்த்திருந்தது, பல திமுகவினரும் அவருடன் சேர்ந்து பிரிந்து சென்றனர். அந்த வைகோ இன்று....
விடுதலைபுலிகளுக்காக போராடும் நல்ல தமிழனாக...
தன் கட்சிக்கு சீட்டுபெறுவதற்காக கூட்டணிவிட்டு கூட்டணி தாண்டி அலைபவராக..
கருத்துகணிப்பில் பாமக வை விடவும் குறைந்த மதிப்பை பெற்றவராக...
விடுதலைபுலிகளை தவிர வேறு எந்த அரசியல் காரணமும் கிடைக்காத அரசியல் துறவியாக....
ஐயோ அந்த பரிதாபம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக சிலநாட்களுக்கு முன்பாக நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள மேடையேறிய வைகோவை மாணவர்கள் தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுத்தார்களாம்.. வைகோ வேதனையும் மேடையைவிட்டு இறங்கியிருக்கிறார். 3முறை இதேபோல நடந்திருக்கிறது. கடைசியில் கட்சிபேதத்துடன் இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
வைகோ இப்போது எதையோ உணர்ந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை