Tuesday, February 17, 2009

இரண்டு தாத்தாக்களும் பட்ஜெட்



இரண்டு தாத்தாக்களும் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டார்கள்
இரண்டு தாத்தாக்களும் படுத்துக் கொண்டே சூப்பர் என்கிறார்கள்.
பட்ஜெட் இரண்டும் வந்துவிட்டன மத்தியிலும் மாநிலத்திலும்
வரி ஏதுமில்லை.... வருமானம் நிறைந்திருக்கிறது..
அந்நிய செலாவணி வரத்து அதிகம்..
வேலைவாய்ப்புகள் கூடியிருக்கிறது என்கிறார் பிரணாப்
கூடவே மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஓ.கே இது மக்களை மனதில் வைத்து போட்ட பட்ஜெட் என்கிறார் மன்மோகன். வரிபோட்டா ஓட்டு இல்லை ஓட்டுபோட்ட பிறகு வரி போடுவோம் என்று சொல்லிக்கொண்டே பட்ஜெட்ட போட்டிருக்கிறார் பிரணாப் தாத்தா..
ஆனால் விலைவாசி மட்டும் குறைந்த பாடில்லை...
சர்வதேச சந்தையில் 10 ரூபாய் பெட்ரோல் விலை ஏறியதற்கு 3ரூபாய் உள்ளுரில் ஏற்றினார்கள். சர்வதேச சந்தையில் 20 ரூபாய் குறைந்த பின்னும் இங்கே 2ரூபாய் குறைத்திருக்கிறார்கள். என்ன கொடுமைசார் இது....
அங்கே மன்மோகன் தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.

நமது தமிழ்நாட்டில் அதுபோலவே கலைஞர் தாத்தா ஆஸ்பத்திரியில்...
அன்பழகன் தாத்தா வருமானத்தை விட 10000கோடிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை செய்திருக்கிறார். ராமதாஸ் இது பாதி சூப்பர் பாதி டூப்பர் என்கிறார்.
பாலம் கட்ட10000 கோடி ஒதுக்கிய ஒரே அரசு என்று சாதனை செய்தி....... இலவசத்துக்கு மட்டும் கூட்டிகழித்து பார்த்தால் 2000கோடி ஒதுக்கீடு (இன்னுமும் உள்ளே இருக்கிறது) இது ஒரு தொலைநோக்கு பார்வையில்லாத பட்ஜெட் என்கிறார். ஜெயலலிதா..
ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஏதோ இருக்கு ஆனா இல்லை பூச்சாண்டிதான் இரண்டுலயுமே...

1 comment:

Anonymous said...

ஏதோ இருக்கு ஆனா இல்லை