Sunday, July 12, 2009

ராஜபக்ஷேக்கு sms...



ஆழி சூழ்ந்த
அதிரடியான
புழுதி பறக்கும்
கலைஞரின்
பொன்னர் சங்கர்
படம் உருவாக்க
துவக்க விழா

நீண்ட நெடு வார்த்தைகள்
நீட்டி முழக்கும் வாக்கியங்கள்
காதல் இளவரசன் பிரசாந்த்
கர்ஜிக்க போகும் தோரணை
வெகுண்டெழும் உணர்ச்சி பிரவாகம்

கர்பிணிகளும் குழந்தைகளும்
கஞ்சிக்கும் சிகிச்சைக்கும்
வழி இன்றி தவிக்கிற
முகாம்களின் நிலையை

இலங்கையின் புதிய பாதுகாப்பு தலைவர்
போன்செகவுகும்
நிரந்தர பாதுகாப்பு விடிவெள்ளி
ராஜபக்சேவுக்கும்
தெரியப்படுத்தும் முன்

பொன்னர் சங்கர்
உருவாகுவது தமிழ் அல்ல
சிங்களத்தில்
ஐ நா வின் கட்டாயத்தின் பேரில்
உங்கள் இருவரையும்
திரையரங்கில் தனியாக
அப்படத்தை பார்க்க
நிர்பந்தப் படுத்த படுவீர்கள்
என்ற தகவலை

ராஜபக்ஷே , பொன்சேகா
மொபைல் எண் தெரிந்தவர்கள்
sms அனுப்பி எச்சரிக்கலாம்
தயார்படுத்தலாம்
என்று கேட்டுக்கொள்ளபடுகிறது

No comments: