Monday, May 26, 2008

கோடிக் காதலர்ளுக்காக தேய்ந்தேன்..... நிலா



மரணத்தை வைத்து பாடாய் படுத்தும்
மதங்களாகட்டும் மனங்களாகட்டும்
விட்டுப் போகும் வெறுமையாகட்டும்
எல்லாமும் போய்விடும் நாள் உண்டு

மரணம் எல்லோருக்கும் கண்டிப்பாக வாய்க்கப் போகிற ஒன்று
அதன் மீதான விசாரிப்பு ஏதும் யாருக்கும் ஏற்படாமலில்லை
அந்த நடு இருளில் மொட்டை மாடியில்
நிலவின் ஒளி கண்களோடு பேசிக்கொண்டிருந்த வேளை

எத்தனையாயிரமாய் பேர்கள் உன்னுடன்
காமம்பார்வை வீசியிருப்பார்கள்
எக்கோடியோ மக்கள் உன்னை
ரசித்துச் சிரித்திருப்பார்கள் அவர்கள் எங்கே

அந்தக் கனவுகள் சுமந்த சதைப் பிண்டங்கள்
எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்து போன
மாயையர்கள் எங்கிருக்கிறார்கள் இப்போது
நான் கேட்ட கேள்விக்கு வெட்கப்பட்டு ஒடிவிட்டது நிலா

நான் இப்போது அதன் காதலனாம்
அதுதான் வெட்கப்பட்டு ஒடுகிறாள் நிலவம்மணி
நானும் வெறும் சதைப்பிண்டம்
நாளைக்கே காணாமல் போவேன்

நான் எத்தனையோ முறை விதவையானேன்.
ஒருநாள் உனக்காக வெறுமையாகுவேன்
உனக்காக தேயும் நாளும் வரும் என்றாள்
மாதா மாதம் அவள் தேய்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

யார் யாருக்காகவோ......