நம் தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கான அடையாளமே இல்லாமல் திரைப்படங்கள் வருவது வருந்தத்தக்கது. உலகிலேயே மொழி அடிப்படையில் மிக உணர்ச்சி கொண்ட மக்கள் நாம் தான் இதில் சந்தேகம் யாருக்குமில்லை. ஆனால் நம்முடைய சினிமாக்களோ அந்த தகுதி எதுவுமே இல்லாமல் இருக்கிறது. உலகத்தில் நம் தமிழகத்தை விடவெல்லாம் குட்டி குட்டியாய் உள்ள பல நாடுகள் உலகம் போற்றும் சிறந்த படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது , ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் இத்தனை ஆண்டுகளில் ஒரு சினிமாக் கூட உலகத்தின் பார்வைக்கு சென்றடையவில்லை(காப்பியடித்த சினிமாக்களை விட்டு, உண்மையான தமிழ் கலாச்சாரத்தோடு மிகைப்படுத்தாமல் வந்த சினிமாக்கள் ). காரணம், தமிழ் சினிமா நாடகத்திலிருந்து வந்தது என்று சொல்லும் சப்பை கட்டு வார்த்தைகள் சரியானதாக எனக்கு தோன்றவில்லை.
நான் காரணமாக கருதுவதுனிமாவில் தமிழரின் வாழ்க்கை காட்டப்படுவதில்லை என்பது தான்(சமூகநிலை):
உலக சினிமாக்களாக நாம் போற்றும் பல படங்களிலிருந்த அவை உலகத் தரம் அடைய சமுக சூழல் எப்படி காரணமாக இருந்தது என்பதற்காக இந்தியாவின்,
சத்யசித்ரேவுனுடைய - பதேர் பாஞ்சாலி
விக்டேரியா டி சிகா- பைசைகிள் தீவ்ஷ்
அக்கிரா குரோசோவா- செவன் சாமுராய்
ஸ்பீல்பர்க்- ஈடி
சிசிலி பி டிமிலி- டென் கமான்ட் மென்ட்ஸ்
ஆகிய படங்களை வைத்து ஆராய்கிறேன்.
இந்த படங்களை எடுக்க காரணம் மேற்கண்ட படங்கள் ஒவ்வொன்றும் பேரலல், சைன்ஸ்பிக்ஸன், மெயின் ஸ்ட்ரீம் ஆகிய முன்று வகைகளைச் சார்ந்தது. இப்படங்கள் உலகம் போற்றவும், வியாபார வெற்றியடைந்ததாகவும் உள்ளன, என்பதால் இவற்றை எடுக்கிறேன். அதனடிப்படையில் இவற்றில் இருக்கும் சமுக நிலையை பார்த்தோமானால் பைசைகிள் தீவ்ஸ் பதேர் பாஞ்சாலி ஆகியவை ரியல் டைமை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. என்றhலும், அவற்றில் வறுமையின் தன்மையும் அதன் பின் வாழும் மக்களின் வாழக்கை நிலையும் மிகத்தௌpவாக எடுத்துக் காட்டப்படுகிறது. பதேர் பாஞ்சாலியில் பக்கத்துவீட்டில் திருடும் அந்த பெண்ணின் நிலை முலமும் பைசைகிள் தீவ்ஸ் தன் பொருள் கிடைக்காமல் போக பதிலுக்கு திருடிவிட்டு நடுத்தெருவில் தன் மகனின் முன்னாள் அடிவாங்கி கூனி குறுகும் தந்தையுமாய் , இவர்கள் வழிகளில் அச்சமுக மக்களின் வாழக்கை முறை அப்பட்டமாக வெளிப்படுகிறது.
டென் கமாண்ட் மென்ட்ஸ் தான் இன்றைய ஹhலிவுட்டின் பிரமாண்ட சினிமாவிற்கு முதல் ஆரம்பம் அந்த வகையில் பென்ஹர் முதல் இன்றைய கிளாடியேட்டர் வரை அவ்வகை சினிமாக்களிலும் அந்தக் கதைக்குண்டான, மக்களின் வாழக்கை நிலை சரியாவே வெளிப்பட்டிருக்கின்றன. ஏன் அவர்களுடைய அறிவியல் சார்புபடங்களான மிக மிஞ்சிய கற்பனை படங்கள் ஈடி முதல் இன்றைய அனிமேஸன் படங்கள் வரை, இவை உண்மையிலேயே நடக்கின்றதோ என்பது போன்ற மாயையை(illution) மிகத்துள்ளியமாக காட்டிவிடுகின்றன.. ஆனால் நம் தமிழ் சினிமாவில்.....
ஈரான்காரர்கள் வெறும் சிறுவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு, கட்டுப்பாடான அந்த சமுகத்தில் உலக அளவிற்கு தங்கள் படைப்புகளை எடுத்து செல்கிறhர்கள்... ஏன் கொரியர்கள் காதலைச் சொல்வதில் கவிதையாய் தீட்டும் அவர்கள் படத்தை பார்த்ததும் ஒஹேh.. அவர்களின் வாழ்க்கை நிலை இப்படித்தான் இருக்குமோ என்று சொல்லி விட முடியும். இவ்வளவு ஏன் நம்மை விட விற்பனையிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவே உள்ள மலையாள திரையுலகில் நியூஸ் பேப்பர் பாய் முதல் இன்றைய ஹீரோயிச சினிமாக்கள் வரை அவர்களின் வாழ்க்கை முறையை அழகாக வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
ஆனால் நமது தமிழ் சினிமா என்ன செய்கிறது.
ஆவணப்படங்களின் தந்தை எனப்படும் பிளகர்டியினுடைய நானுhக் ஆப் எர்த் திரைப்படம், மனித வாழ்க்கையை ஆவணப்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை வெளிப்படுத்தியது. அவருடைய வருகையை ஏற்றுக் கொண்ட சினிமா மக்களின் வாழ்க்கை நிலை அவசியம் என்பதை உலகம் முழுவதும் பரப்பியது. புனுவல், கொடார்ட், ட்ரூபோ என்று அத்தனை பேரும் அவர்களிடைய சினிமாவை எங்கள் மக்களைக் காட்டுகிறேhம் என்கிறhர்கள். ஆனால் நம்மிடத்தில் மட்டும் ஏன் அந்த அது இல்லாமல் போனது கண்டிப்பாக இதற்கு பத்திரிக்கைகாரர்களும் ஒரு வகையில் காரணம்.
ஆனால் நமது தமிழ் சினிமா எதனைக் காட்டுகிறது...
பாரதிராஜh செல்வராஜ; போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தமி்ழ் மக்களை காட்டியதாக தெரியவில்லை. அவர்களும் கூட விற்பனை பூச்சு என்ற தங்களைத் தாங்களே ஏமாற்றி அந்தப் படங்களையும் ஏக்கப்பட வைத்து விட்டனர். தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று பேசும் இயக்குனர்களோ தமிழ் மக்களுக்கு கருத்து சொல்லி அரசியல் முலாம் தேடுகின்றனர். எப்போது தான் உலகம் தமிழனின் வாழ்க்கையைப் பார்ப்பது. இல்லை ரசினிகாந்தும், விசயகாந்தும், விசயும் நடித்த படங்களைக் காட்டி தமிழ் மக்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது என்ற காட்டப் போகிறேhமோ நம் வருங்கால தலைமுறைக்கும் உலகத்திற்கும், உலக சினிமாக்களைக் காட்டி காப்பி அடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதலோ, தொழில் நுட்பந்தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்களை மறைத்து இந்த சினிமாவிலிருந்து காப்பியடித்தார்கள் என்று சொல்லி அவர்கள் சினிமாவை அதி மேதாவிகளாக விமர்சனம் செய்தோ... சினிமாவை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு அவர்களின் வளர்ச்சிக்கு சிறிதும் பாடுபடாத பத்திரிக்கைக்காரர்களோ நினைத்தால் நல்ல சினிமா வர வாய்ப்பிருக்கிறது இல்லாவிட்டால் இன்னும் பத்தாண்டுகள் கழித்து என்னை மாதிரியே யாராவது ஒருவர் இதே மாதிரி உதாரணம் காட்டி (சிம்பு தனுசு விசால் பேர்கள் அடிபடலாம் பத்தாண்டுக்கு முன்னாள் என்னைப் போல யாராவது எழுதியிருக்கலாம் அது நான் இல்லை..) உலகத் தரத்திற்கு தமிழ் சினிமா வளர அதிக பிரசிங்கியாக பேசிக் கொண்டிருக்கலாம்.
உலகத் தர சினிமாவே தமிழில் வருக...... வருக...
எங்கள் தமிழ் மக்களின் அடையாளம் காட்டி
மற்ற மக்களின் வாழ்க்கையில் திடுடிய
தொழில் ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
(நாங்கள் இந்திய நாட்டின் உயர்ந்த தொழில் நுட்பவாதிகள் என்று சொல்லிக் கொள்வதால்)
புதிய முயற்சிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.......
No comments:
Post a Comment