Thursday, September 27, 2007


இட ஒதுக்கீடு குறித்து பெரிhரின் நிலைப்பாடுகளை படிக்க படிக்க தமிழக மக்களுக்காக ஏன் கடைக்கோடியின் ஒரு மனிதனுக்காகவும் செயல்படவேண்டும் அரசாங்கம் என்பதில் நிலையாக இருந்தவர் பெரியார் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் அரசின் திட்டங்கள் கடைக்கோடி கிராமங்களுக்கும் கொஞ்மாவது சென்று கொண்டிருக்கிறது என்றhல், அதற்கு முழுக்காரணம் அவர் எழுப்பிய இடஒதுக்கீட்டுக் குரல் தான் தமிழ் நாட்டின் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்துள்ளது. இது மகிழச்சி அளிக்கின்ற விசயமா இல்லையா பிந்தைய விவாதம் முதலில் சிறுபாண்மையினருக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று தொடுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கைப்பற்றி தான் இதில் குறிப்பிடுகிறேன்.


சிறு பன்மையினராக இருக்கும் தமிழக மக்களில் மேற்கூறிய மக்கள் மட்டும் கிட்டத் தட்ட ஒரு கோடி இருப்பார்கள் ஆனால் அவர்கள் இதுவரை தமிழ்நாட்டில் அரசியல் ரீதுயாக பெரிய பதவிகளை வகித்தாகவோ, இல்லை அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவோ தெரியவில்லை ஒவ்வொரு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்பண்டிகைளின் போதும் அத்தனை அரசியல் தலைவர்களும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று தங்களை அவர்களின் நண்பர்களாக காட்டிக்கொள்கிறhர்களே ஒழிய ஒரு போதும் அவர்களுக்காக உழைத்தாக தெரியவில்லை போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடும் அரசியல் வாதிகள் சொல்லும் கணக்குகள் நாங்கள் எவ்வளவு அவாகளிமிருந்து இவர்களுக்கு அதிகமாக செய்தோம் என்ற கணக்குகளில் சிறுபான்மையினருக்கு செய்ததில் சண்டையே வராது காரணம் இருவருமே ஏதும் செய்யவில்லை இப்போது அறிவிக்கப்ட்டடிக்கும் இந்த திட்டம் கூட இந்த அராசாங்கத்தின் சிந்தனையில் ஒழித்த திட்டமில்லை மாறhக பக்கத்தில் இருக்கும் மாநிலம் செய்திருக்கிறது. அதற்கு வழியேற்பட்டால் நாங்களும் செய்வோம் என்றhர்களே ஒழிய தாங்களாக செய்து விட வில்லை.

முன் குறிப்பிட்ட அந்த வழக்கை தொடுத்தவர் சாதி அடிப்டையில் பார்க்காதீhக்ள் என்று தொடுத்த வழக்கு சரியானது தான் என்றhலும் இன்றைக்கும் சென்னையில் வந்து பாருங்கள் பத்திரிக்கைகளில் வீடு வாடகைக்கு கிடைக்கும் விளம்பரங்களில் தாழத்தப்பட்ட இனத்தவராக இந்து சமூகத்தில் சித்தரிக்க படுபவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வீடு இல்லை என்று கொட்டை எழுத்துக்களில் எழுதிப்போட்டிருக்கும் வீடுகளை பார்க்க முடியும் தாழ்த்தபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட சிறுபான்மையினருக்கு வழங்கப்படததால் அவர்கள் சமூகத்தில் இன்னும் வளராமலேயே இருக்கிறhர்கள். அவர்கள் வளர்வதற்கு மதத்தின் பேரால் ஒதுக்கீடு வழங்குவதில் தப்பில்லை...
பெரியார் என்னதான் பார்ப்பணர்களை எதிர்த்திருந்த போதிலும் அவர்களின் ஆதிக்கத்தை தான் முக்கியமாக எதிர்தார் எனலாம் அவர்கள் நம் சமூகத்தில் மூன்று சதவீதம் பேர் இருக்கிறhர்கள் அவர்களுக்கானதை கொடுத்தவிட வேண்டியது நியாயம் தான் என்று சொன்னார் பிறபடுத்தபட்டோர் களுக்கான இடஒக்கீட்டு மசோதாவின் போது ஏற்பட்ட போராட்டங்களில் ஒற்றுமொத்தமாக பார்ப்பணர்களுக்கு எதிராக கிளம்பியது குரல் ஆனால் அதிலும் அவர்களுக்கான இடம் இத்தனை சதவீதம் தான் என்று பிரித்துப் பேசியதுபோல ஏன் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட குறித்து யாரும் பேசவில்லை.. மதங்களின் அடிப்படையில் செய்ய வேண்டாம் யாரும் இந்தியாவில் சிறுபான்மையிருக்கு...ஏன் இப்படி அவர்களும் இந்திய குடிமக்கள் தானே


No comments: