Monday, September 17, 2007

குறியீட்டு சினிமா

சினிமா என்னும் நவீன இலக்கியத்தில் எழுதுவதற்கு இன்னும் 100 சதவிகதம் மிச்சமிருக்கிறது. ஒரு புத்தகத்தில் எழுதக்கூடிய கதை சினிமா ஆகிவிடுமன்றhல், அந்த சினிமா உண்மையான சினிமா இல்லை. உண்மையான சினிமாவின் கதையை எந்த புத்தகத்திலும் எழுதுவிட முடியாது. அது ஒளியில் வரையும் பூச்சி போல, அதன் இறக்கைளையும் அங்கங்ளையும் பறக்கும் பாவனைகளையும் சுட்டுவிட, கேமராவுக்கு அதிக கற்பனைகளை கடந்த உண்மை தெரிகிறது. காட்சிகளின் ஊடாக கவர்ந்திழுக்கும் விசையிருக்கிறது. உணர்ச்சி இருக்கிறது.
எழுத்துக்களை படித்துக் கொண்டிருக்கும் போது, எப்போது வேண்டுமானாலும் அந்த புத்தகத்தின் காதை மடக்கி வைத்துவிட்டு இன்னொரு நாள் படித்துக் கொள்ளலாம். ஆனால், சினிமாவில் முழுக்க காட்டியே ஆக வேண்டும் பார்வையாளன் பார்த்தே ஆகவேண்டும். பார்ப்பவனை பூஜpத்தே ஆகவேண்டும் படைப்பாளிகள். அவனுக்குள், எதைகாட்டி எப்படி காட்டி நிறுத்தி வைத்து அவனை பூஜpப்பது.
சினிமாவின் குறியீடு உண்மையில் யாருக்காகவும் எழுதபட வேண்டுமா? இல்லை சினிமாவை குறியீடாக காட்ட வேண்டுமா? உண்மையில் பொறுமையாக பார்த்திருக்கும் ரசிகனின் வாழ்க்கையையை காட்டும் குறியீடாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
ஹிட்ச்காக் சொல்வார் உண்மையில் மக்களிடம் வெற்றி பெறுபவர்கள், ஜனரஞ்சக பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் தான், அவர்கள் தான் மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து வைத்திருக்கிறhர்கள் என்று. உண்மை தான், ஆனால் அதிகம் பேர் படிக்கும் பத்திரிக்கை என்பதற்காக அது நல்ல பத்திரிக்கை என்று எப்படி சொல்லி விட முடியுமா? ஒரு நாளில் அதிகமாக விற்பனையாவது மது பானம் என்றhல் அது நல்ல பொருளா?
ஒரு மக்களின் குறியீடாக அவர்களின் வாழ்க்கையை ஒரு சினிமா பிரதிபளிக்கின்ற போது அது ஏன் இவ்வளவு பொய் சொல்ல வேண்டும், குறிப்பாக நம் தமிழ்நாட்டில்.
உண்மையைக் காட்டினால் அது சினிமாவுக்கு இயல்பாக இருக்காது என்பது தகுந்த வாதம், அது உணர்த்தபட்டிருக்கிறது. ஆனால், அந்த முழுமையான குறியீட்டை பொய்மையாக வேணும் எழுத வேண்டும் அவர்கள் தான் தொழில் வல்லுநர்கள். அதற்காக பொய்யயே செய்யும் நம் தமிழ் சினிமாவைச் சொல்லவில்லை. ஒரு குறியீட்டு முறை பார்ப்பவர்களையே குறியீடாகக் காட்டுவது அதாவது பார்வையாளனை. ஆனால், நம் மக்களின் குறியீட்டுச் சினிமாவை நான் இன்னும் பார்த்தாக நினைவில்லை. பசி படத்தில் தமிழனும் தெலுங்கனும் கலந்த ஒரு உண்மையினை உணர்ந்திருக்கிறேன். அது நல்ல குறியீட்டுச் சினிமா என்று நினைவு.( தமிழ் சினிமாவை பொறுத்தவரை.)பாரதிராஜhவின் படங்களில் அது இருப்பதாகவே தோன்றுகிறது.
ஸ்வீடனைச் சேர்ந்த இங்மார் பெர்க்மேனுடைய படங்களில், ஒரு குறிப்பிட்டக் காட்சியை விளக்குவதற்கு அதற்கு தகமான வேறெhரு காட்சிசை காட்சி உணர்த்துவார். நிறைய பேர் அவரது சினிமா ஏற்கனவே மிகவும் ஸ்லோ சினிமா, அதிலும் அவர் காட்சிகளை புரிய வைக்க ஒப்புமை காட்டி வேறு குழப்புகிறhர் என்று சொல்வர்கள். ஆனால் காட்சிகளை ஒப்புமை படுத்தி எடுக்கபட்ட அந்த நாட்களின் அந்த சினிமாதான், இன்றைய கவிதை சினிமாவான கொரியன் மற்றும் சீன திரைபடங்களின் மூலமானது... காட்சி குறியீடானாலும் சினிமா குறியீடானாலும் சுகமாகவே முடியம் சினிமாவுக்கு.....
சினிமாவில் குறியீடு அவசியம்....

1 comment:

Anonymous said...

welcome