தமிழனை திருத்தமுடியாது.. என்று வார்த்தைக்கு வார்த்தை தமிழர்களை திட்டும் நமது தங்கர். தான் ஒரு நல்ல தமிழன், தமிழனுக்காக போராட, தமிழனுக்காக குரல் கொடுக்க தமிழனின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்ட தனக்கு இங்கே யாரும் ஆதரவு தருவதில்லை, என் நெருங்கிய நண்பர்கள் கூட என்னையும் என் சினிமாவையும் வெறுக்கிறhர்களோ! என்ற பாணியில் ஆனந்தவிகடனுக்கு பேட்டி தந்திருக்கிறhர். தமிழருக்கு இவ்வளவு கொடுமையா என்று மக்கள் ஆதங்கபட வேண்டுமா? இல்லை இவர் படத்தை இனிமேல் நாம் பார்க்க வேண்டும் என்ற உறுதி மக்களுக்குள் ஏற்பட வேண்டுமா எதை நினைத்து அவர் இப்படி பேட்டி தந்திருக்கிறhர் என்ற தெரியவில்லை. என் படத்தை அடிமக்களுக்காக எடுத்தால் அவர்கள் சண்டை படம் பார்க்கப் போய்விடுகிறhர்கள். படித்தவர்கள் எல்லாம் என் படத்தை விரும்புகிறhர்கள் என்பதாய் அவர் சொல்லியிருக்கிறhர்.
இந்த பேட்டியின் மூலம் தன் படத்தில் தவறிருக்கிறது என்று தானே பொறுப்பேற்கிறhர் போலும். எனக்கு நினைவிருக்கிறது ஒரு முறை எழுத்தாளரும் இயக்குனருமான ஓருவரை சந்திக்க நேர்ந்த போது அவரிடம் தங்கரின் படங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார் அவர் பேசும் அளவிற்கு அவர் திரைபடங்கள் தரமில்லாமல் இருக்கின்றன என்று. நான் உண்மையிலேயே தங்கரை நல்ல கலைஞர் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் சினிமாவில் மேற்கண்டவர் சொன்னதுபோல தவறிருக்கிறது.
நீங்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு முன்னாள் நாம் நம் தமிழ் மக்களுக்கு சென்றடையும் அளவிற்கு சரியாக செய்திருக்கிறேhமா? என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம் தமிழ் கலாசாரத்தை என்று சொல்ல முடியாவிட்டாலும் தேவர் சமுதாய ஆதிக்கத்துடனான கலாச்சாரத்தை எவ்வளவு தௌpவாக் காட்டியிருந்தார் பாரதிராஜh. ஏன் இன்று வந்திருக்கும் வசந்த பாலன், அமீர் ஆகியோரும் கூட நல்ல படியாகத் தான் தங்கள் பணியை செய்கிறhர்கள். ஆனால் தங்கர் செய்ததென்ன கலாச்சாரத்திற்கான நல்ல கதைகளை எடுத்துக்கொண்டு அதில் விற்பனை முலாம் ஒன்றை பூசி, நீங்கள் தேடும் தமிழ் மக்களுக்கும் இல்லாமல் கொஞ்சம் தமிழ்நாட்டைத் தாண்டி கூட கலாச்சாரம் பரப்பும் திரைப்பட விழாக்களுக்கும் செல்வதில்லை அவருடைய படைப்புகள். (தமிழனின் கலாச்சாரம் தெரியவில்லை) காரணம் அவர் சினிமாவில் தரம் இல்லை முதலில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்பது என் கருத்து நீங்கள் ஒரு நல்ல படைப்பாளி என்று அவருக்கு சொல்லத் தோன்றுகிறது. தங்கர் அவருடைய டெக்னிகல் அறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்து நல்ல கதை சொல்லும் திறன் பiடைத்த நீங்கள் உலக அளவிற்கு தமிழ் மக்களின் கலாச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்(மீண்டும் நினைவுப் படுத்துகிறேன் திரைக்கதை கொண்டு செல்லுதல் உளவியல் தொழில் நுட்பத்தில் வருகிறது).
தமிழ் மக்கள் ரசிக்கும் படியான படமாக, அழகியைப் போல மீண்டும் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறhர்களோ என்று அவர் பேசிய வார்த்தைகள் கொஞ்சம் ஆழமாகவே எனக்குள் பதிந்தது, காரணம். அழகி நல்லபடமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. விற்பனையிலிருந்து ஒதுங்க நினைக்கிறேன் என்பதாய் பேசும் நீங்கள் காலாச்சாரங்களை துல்லியமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்... மிகக் குறைந்த செலவிலும் அதே நேரம் நேர்த்தியான கதையாடலாலும் சிம்பிள் கேமரா மூமன்ட்ஸ் என்று நாம் சொல்லும் அசைவில்லா கேமரா நேர்த்தியையும் பயன் படுத்தி கட்டுப்பாடான அவர்கள் சமூகத்தையும் காட்டிக் கொண்டிருக்கும் ஈரான் தேசத்தை நிமிர்ந்து பாருங்கள் .
உங்களின் வடதமிழக மக்களின் வாழ்க்கை முறையை, பேச்சு வழக்கை ஒரே ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் உண்மையான வாழ்க்கை முறையோடு அது வெற்றியடைய வேண்டும் என்ற கனவு கண்டுகொண்டு இயக்காதீர்கள். இது என் மக்களின் சினிமா என்று மட்டும் நினைத்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்...(உங்கள் சினிமாவில் அப்பகுதி மக்களின் பேச்சு வழக்கு மிகச் சரியாக சித்தரிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்ற சப்பைக் கட்டு தேவையில்லை- உங்கள் படத்தில் குற்றம் இன்னும் நிறைய இருக்கிறது.)
for reference:அப்பாஸ் கிராஸ்தமி, மெக்மல்லப், ஹhனா மெக்மல்லப், சமீரா மெக்மல்லப், மஜத் மஜதி
No comments:
Post a Comment