சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.
சாலையெல்லாம் நிரம்பி வழிந்தது கூட்டம்
சூரியன் யாரிடம் சொல்லாமல்
தாக்கிவிட்டு வியர்வைத் துளிகளில்
தாகம் தனித்துக் கொண்டிருந்தது......(Establish)
சட்டையின் உள் வரை போய்
புழுக்கத்தில் வேகமாய் வேர்த்தது.
பக்கத்தில் உள்ள யாரையும் நான்
பார்க்கவில்லை காரணம் என்(inter)
கண்களை அடைத்துக் கொண்டு
எதிர் பாதையில் நடந்து வந்தவள்.....?
எனக்கு ஏன் அவளையே பார்க்க வேண்டும்
பதில் எல்லாம் தெரியவில்லை...(action)
நெருக்கடியாய் நின்ற மக்கள் கூட்டத்தை
தொட்டேன் தொடர்ந்தேன் என்னை அறியாமல்
பக்கத்தில் நடந்த அத்தைகள் மீது மோதி
பாவைகள் எதிராய் மறித்து வசைபாடிவிட்டு(reaction)
அவளை நோக்கி என் புறமிருந்து
அந்தபுறம் போனேன் யார் சொல்லியிருப்பார்.
மன்மதன் ஒருவன் மயங்கி வருகிறhனென்று
சிட்டாய் பறந்து விட்டால் அந்த கணம்..(tension)
அந்தவளின் குட்டி றெக்கையை பார்க்க
பக்கத்தில் இருந்த மாடியில் ஏறிவிட்டேன்
வெயில் என்னை பார்க்காமல் மறைந்து
நிழலாய் என்மேல் பாய்ந்துவிட்டு
அவளை கட்டிக்கொண்டு நின்றது.(built-up)
அதோ போகிறhள் அவள் அவளுக்குவேர்வை
தாவணியில் துடைக்கிறhள்
நெற்றியில் இட்ட மை அவள் விரலிலும்
அவளின் கருப்பழகின் ரகசியம்
இப்போது தான் புரிந்தது எனக்கு
சூரியனே நீ தான் மகா கில்லாடி(resolution)
சூரியன் நகர்வில்-lighting
மாடிக்கு ஒடியதில்-crane
long shot...
Extream long shot....
close-up...
mid shot....
எல்லாம் தெரிகின்றதா கேமரா கட்டழகி எனக்கேதோ காட்டுகிறhள்! இப்போதும் எனக்கு. உங்களுக்கும் காட்டுகிறhளா என்ன?
No comments:
Post a Comment