Wednesday, September 26, 2007

MNCக்களை விட மோசமானவர்கள் நம் நாட்டு நடிகர்கள்....


ஒரு காலத்தில் விடுதலைக்காக அந்நியர்களை விரட்டுவதற்காக நம் முன்னோர்கள் பட்ட பாடுகளும் பெற்ற அடிகளும் சொல்லி அடங்காதது. அந்நியர்கள் நம் நாட்டை விட்டு போன பின்னரும் இன்றும் பிளாட்பாரத்தில் வசிப்பவர்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பலரும் (கிட்டத்தட்ட 30சதவீதம் என்கிறது ஆய்வு) இருந்து கொண்டு தான் இருக்கிறhர்கள் அதற்கு காரணம் நமது சினிமா. இந்திய மக்கள் தொகையில் பணக்கார வரிசையில் முதல் 34 பேர் வைத்திருக்கும் பணமும் எஞ்சிய 110 கோடி மக்களிடமும் இருக்கும் பணமும் ஒரே அளவு இதற்கும் காரணம் சினிமா தான்....

சினிமா செய்த கவர்ச்சியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஆட்சி மாற்றமே வந்தது. அந்த அளவிற்கு மக்களின் மனங்களில் பதிந்து போன சினிமா நடிகர்களின் சுயநலமே மேற்கூறிய அத்தனைக்கும் காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்திய மண்ணில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு MNCயும் எந்த பெரிய நட்சத்திரத்தை நாம் பயன் படுத்தலாம். நமக்காகவே காத்துக் கொண்டிருக்கிறhர்கள், அங்கே நடிகர்கள். நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்கள் மிகவும் பாடுபடுவார்கள் என்பதாய் தான் அவர்கள் இங்கே வருகிறhர்கள் நம் நாட்டின் சொத்தை அடுத்த நாட்டுக்கு கொடுக்கும் நடிகர்களுக்கு இந்தியாவில் கோவில், ரசிகர் மன்றங்கள்.

இது காலம் காலமாக சொல்லியாகிவிட்டது மறைமுகமாக இதனை செய்து கொண்டிருந்த நடிகர்கள் இப்போது நேரடி எம் என் சி க்களாக மாறிவிட்டார்கள். அது தான் அயல் நாட்டில் பாடல் எடுப்பது... உலகத்தில் தனிநபர் வருமானங்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகளின் முக்கியத் தொழில் சுற்றுலாவாத்தான் இருக்கும். உதாரணம் சுவிட்ச்சர்லாந்து, பிரேசில் அந்த நாடுகளிளெல்லாம் மற்ற நாட்டினரைக் கவர தங்கள் நாட்டு நடிகர்களைக் கொண்டு விளம்பரப் படம் உண்டாக்கி உலகத் தாரை வரவேற்கின்றனர். ஆனால் நம் நாட்டிலோ கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் தரும் காசுகளை அயல்நாடுகளில் கொட்டி அவர்களது பொருளாதாரத்துக்கு வளர்ச்சி ஏற்படுத்தி தருகின்றனர் நமது நடிகர்கள்.


ஒரு படம் எடுக்கும் செலவில் இன்று ஒரு பெருந்தொகையை பாடல்களுக்காக ஒதுக்குகினறர். அவற்றை வெளிநாட்டில் போய் கொட்டிவிட்டு வந்தால் தான் நமது ரசிகர்களுக்கு சாந்தமென்று நமது நடிகர்கள் தான் தீர்மானிக்கிறhர்கள். இப்போது போதா குறைக்கு கம்போசிங் என்ற பெயரில் வெளிநாடு பறப்பது. எப்படி நம் காசுகளை வெளிநாட்டுக்கு கடத்தலாம் என்று வழி தேடுகிறhர்கள் ஒரு வருடத்திற்கு வரும் 100 படங்களில் 10 படங்களின் பட்ஜெட் மற்ற 90படங்களின் பட்ஜெட்டுக்கு சமம் அந்த பத்து படத்தை பற்றித்தான் பேசுகிறேன். அவர்கள் செய்வது தான் இவ்வளவும்... வடஇந்தியாவை பொறுத்த வரை குட்டி நட்சத்திரம் கூட விளம்பரதிற்கு வந்து விடும் ஆனால் தென்நாட்டில் உள்ள நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பது குறைவே சூர்யா, மாதவனைத் தவிர.



இங்கே வரவேற்க வேண்டிய ஒரு விசயம் நடக்கிறது. அது சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் இருவரும் எந்த எம் என் சி விளம்பரங்களிலும் நடிப்பதில்லை இவர்கள் இருவரும் முறையே பெப்ஸி, ஹீரோ கோன்டா விளம்பரங்களில் நடித்திருந்த போதும் மீண்டும் அவர்களை நடிக்கச் சொன்ன போது ஏற்க மறுத்துவிட்டடார்கள் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் படங்கள் நஷ்டமடைந்த போது அவர்கள் வந்து கேட்ட போது மறுத்திருக்கிறhர். எல்லா நடிகர்களும் இப்படி மாறுவார்களா என்ன?


அவர்களுக்கு மேலைநாட்டு கலாச்சாரத்துக்கு தானே மாறுவார்கள்(நாடு மாறிகளாக)


MNCகளாக.....


இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளிலும் மக்களின் வாழ்க்கை முறை வளராமல் இருப்பதற்கு அவர்கள் பொறுப்பேர்பார்களா?

No comments: