என் இதயம் என்னும்
வெள்ளிக் காகிதத்தில்
கவிதை எழுதியவர்களை விட
அதை கசக்கி
பிழிந்தவர்கள்தான் அதிகம்
தாத்தனும் அப்பனும்
மகனுமாய் சேர்ந்து
மாறி மாறி என்னை
ரசித்தார்கள் நீ தான்
என் கனவுக் கன்னி என்று
ஆனால் இன்னும் நான்
முதிர்கன்னி
நான் செய்த தவத்தால்
கிடைத்த கணவன் இவன் என்று
கடவுளை கும்பிடுவோரே
மனைவிகளே நான் தான் அவன்
பத்திரமாக இருக்க
காரணம் என்று உங்க
ளுக்குதெரியுமா?
உலகத்திலேயே பொது சொத்து
நாங்கள் மட்டும் தான்
என்று நினைக்கிறேன்
ஏனென்றhல் எங்களை
இவள் அரசாங்கத்துக்கு சொந்தம் என்றேh
அடுத்தவளுக்கு சொந்தமென்றேh
யாரும் சொல்வதுமில்லை
நினைப்பதுமில்லை அந்த நேரத்தில்
பசுக்கள் ஆயிரம்
காளைகளைக் கண்டாலும்
கன்றுக்கு நக்கிக் கொடுக்க மறக்காது...
எங்களுக்குள்ளும் உணர்வு இருக்கிறது.
1 comment:
A toching kavithai.. i really enjoyed it.. thanks
Post a Comment