என் துhண்டிலில் சிக்கிய மீன்
பெண்ணா என்று எனக்கு தெரியாது.
ஆனால் பிடித்த மீன்களை
அவள் முன் கொண்டு போனபோது
இரண்டு மீண்களும் கண்களை
உருட்டி என்னை சுழற்றின
துhண்டில் மீனுக்குப் போட்டேனா
இல்லை அவளுக்குப் போட்டேனா
அவள் சமைத்து தந்த
குழம்பின் ருசி
அப்பப்பா அவ்வளவு
அற்புதமப்பா
விரல்களில் இடுக்குகளில்
ஒட்டியிருந்த கடைசிசொட்டு
எச்சில் கலந்த குழம்பையும்
உறிஞ்சிக் குடித்தேன்
பாலாய்போ பால் பல் ஒன்று
நகக்கண்ணில் பட்டுவிட்டது
பாவம் இரண்டு நாட்காளாய்
விரல்களை உதறிக் கொண்டே
திரிந்தால் அவள்
No comments:
Post a Comment