பூ நுhலில்லை
அர்ச்சனையில்லை
யாரும் என்னை ஐயர் என்று
சொல்லத் தேவையில்லை..
என் பாட்டனார்
மணியடித்தார்
என் தாத்தார்
மந்திரம் சொன்னார்
என் அப்பார்
மண்டைக்கனம் உனக்கு
என்று அத்தனையையும்
உதறிவிட்டு ஒருத்தியுடன்
ஓடிவந்தார்
இப்போது நான்
திராவிடர்கள் என்னை
பாப்பான் என்று விரட்டுகிறhர்கள்
பார்பணர்கள் என்னை
பறையன் என்று மறிக்கிறhர்கள்.
நான் எதையுமே கேட்கவில்லை
நான் பட்டாபியாகவேண்டாம்
கலெக்டர் ஆகவேண்டாம்
எனக்கு வேண்டியதெல்லாம்
தமிழ்நாட்டில் என் ஜhதியைக்
கேட்காத ஒரு ஊர்... இருக்கிறதா..
No comments:
Post a Comment