Monday, October 8, 2007

என்னவளே நீ சாலையில் நடந்து சென்றாய்...



எதிர்பாராமல் நீ என்னை
பார்த்து விடவேண்டும் என்று
எதிர்பார்த்துக் கொண்டே
நடந்து வருகிறேன்
தினம்தோறும்

சாரலும் இல்லை
மழைத் தூரலும் இல்லை
உன் பார்வை பட்டதும்
நனைந்து போகிறேன்.

உன் மனதில் ஆணவம்
இருக்குமோ? என்று எனக்கு தோன்றுகிறது
எல்லோரும் உன்னை பார்க்கிறார்கள்
என்று நினைக்கிறாயா? இல்லை
எல்லோரும் பார்க்கவேண்டும்!
என்று நினைக்கிறாயே ஏன்?
அடிக்கடி உன்னையே நீ சோதித்துக் கொள்கிறாய்.

நீ சிரிப்பாயா? அந்த பையனிடம்
நீ சிரித்த போது தான்
கண்டு கொண்டேன்.
சிரிப்பிலும் மொழி ஒன்று உண்டென்று

நீ மௌன விரதம் இருக்கிறாயே
தயவு செய்து உன் கண்களை
துணியால் மறை
அவைதான் அதிகமாக பேசுகின்றன.

உன் காலடித் தடத்தை
பார்க்காதவனே
உலக அதிசயத்தை
வரையறுத்தவன்....

No comments: