தமிழ் சினிமா தோன்றிய காலம் தொட்டு இன்று வரை, தமிழ் நாட்டின் உயர்ந்த நாகரிகமாக சொல்லப்பட்டு வருவது பிராமண கலாச்சாரம். ஊமைப்படத்தில் கீசகவதமாகிய அந்த முதல் சினிமா முதல், உலகத்தை திருத்துகிறேன் என்று சொல்லும் இன்றைய சங்கர் வரை குடியான மக்களை சோம்பேறிகளாகவும் தவறு செய்பவர்களாகவும் சுட்டிக் காட்டுகிறதே ஒழிய பிராமணர்களுடனான ஒப்புமைக் காட்சிகளில் மற்றவர்கள் தலைகுனிந்து நிற்கும் படியே அமைக்கப் பட்டிருக்கிறது.
பிராமணர்களை காட்டிய சினிமாகள்:
சினிமா என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகம், ஒரு படத்தில் இது தான் நமது மக்களின் வாழ்க்கை நிலை என்று காட்டும் போது அது பார்ப்பவர்களின் அடி மனத்தில் ஆழப் பதிந்து போகிறது. உலக மக்கள் பார்க்க வாய்க்கும் போது, தமிழர்களது நாகரிகம் குறைவானது என்றும், இவர்கள் சோம்பேறிகள் என்றும் தான் உலகத்தார் அறிந்து கொள்வார்கள். இதில் வருந்ததக்க விசயம் என்ன வென்றhல், பிராமணர்கள் அல்லாதவர் இயக்கிய படங்களிலும் அவர்கள் சினிமாவில் பிராமண கலாச்சாரம் உயர்ந்தது என்பதாய் தான் சொல்லி சென்றிருக்கிறhர்கள். சொல்லிக் கொண்டிருக்கிறhர்கள். அதற்கு காரணமும் சினிமாதான், அவர்களது அடி மனதில் முந்தைய சினிமாக்கள் விதைத்திருந்த அந்த வேசத்தை தான் வெளிக் கொணர்ந்திருக்கிறhர்கள். அது தான் சினிமாவின் தாக்கம்.
பிராமணர்களை மையப் படுத்தி வந்திருக்கும் சினிமாக்களிளோ இன்னும் ஏகலோகம். பிராமணர்கள் பலரை நாயகர்களாக கொண்ட நாவல்கள் தான் தமிழகத்தில் ஏக பிரசித்தம் ஜெயகாந்தன், பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி....... கணக்கில் அடங்காது அவ்வளவு எழுத்தாளர்களும் பிராமணரை எழுதாத நாவலாசிரியரே இல்லை எனும் அளவிற்கு எழுதியாகிவிட்டது. ஆனால், அவர்களிடத்தில் குறைந்த பட்சமான ஒரு உண்மையிருந்தது. திஜ வை பார்க்கும் போது அவர் அவருடைய சமூகத்தில் இருந்த பல விசயங்களை அப்பட்டமாக காட்டினார். ஆனால் சினிமாக் காரர்கள், நாவல்களிலிருந்து சினிமாக்கதைகளை எடுத்துக் கொண்ட போதும் கூட சினிமாவாக்க எடுத்துக் கொண்டதெல்லாம் எப்படியெல்லாம் பிராமணர்களை கொண்டாடலாம் என்பதாக இருந்திருக்கிறது.
இது தொடர்ந்து நீட்டிக்க கூடாது என்பது தான் எடுத்துக் கொள்ளவேண்டிய பொருள் காரணம் பல வற்றைக் கூறலாம்.
இஸ்லாம் சமூகத்தை சொல்லும் போது, அவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்ற தாக்கத்தை எவ்வளவு அழகாக அத்தனை மக்களின் மனதிலும் ஏற்படுத்திவிட்டது.n இப்போது வந்திருக்கும் சிவாஜp படத்தில் படத்தின் கதை ஒட்டத்தில் ஆயிரம் குறையிருக்கிறது, உலகத்தில் நடக்கும் விசயத்தை லாஜpக் மாறhமல் காட்டுகிறேhம் என்ற சாயத்தை பூசிக்கொண்டு நான் பெரிய இயக்குநர் என்று சொல்லிக் கொள்ளும் சங்கரின் மனதிலேயே முஸ்லீம்கள் தீவிர வாதிகள் என்று காட்டும் படி ஆகிவிட்டதே அப்படி என்றhல் சராசரி மக்களின் மனதில் பதிந்திருப்பதில் குற்றம் சொல்ல முடியாது, அதற்கும் அப்பட்டமான காரணம் சினிமா. நடப்பதைத் தானே காட்டுகிறேhம் என்பது சப்பைகட்டு நடப்பதையெல்லாம் காட்டிக் கொண்டுதான் இருக்குறீர்களா? என்பது அவர்களுக்கு பதிலான கேள்வி
பிராமணர்கள் காட்டிய சினிமா
சினிமா தோன்றிய காலம் தொட்டே பரவத்துவங்கிய ஒரு விசமான விசயம் புராண சினிமா, நாடகத்திலிருந்து சினிமா வந்ததும் ஊமைப்படங்களில் புரிய ஏதுவாக நாடகக் கதைகளை படங்களாக்கினர். அது முதல் ஊமைப்படத்தில் தொடங்கியது கீசக வதம், திரௌபதி வஸ்திராபரணம் என்று நீண்டது படப்பட்டியல். சமூகப் படங்களாக உருப்பெற்ற பேசும்படக் காலத்திலும் அத்தனையிலும் பிராமணர்களின் வாழ்க்கையும் கடவுள்களை பூஜpக்கும் மக்களின் வாழ்க்கையையும் காட்டி சினிமா புதிய மறுமலர்ச்சியை தேவையில்லாத மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. பெரியாரின் வருகையின் போது அவர் தலைதலையாய் அடித்துக் கொண்டது தயவுசெய்து குடியானவர்களே நீங்களும் அவர்களின் சினிமாவை செய்யாதீர்கள் என்று......... கேட்கவில்லை எந்த சினிமா முதலாளியும் கேட்கவில்லை எந்த இயக்குனரும் விளைவு.....
இன்று திராவிடர்களின் பூர்விகமும் கலாச்சார முறையும் அவர்களது வரலாறும் பண்டிகையும் அவர்களது வாழ்க்கை முறையும் மறந்து போய் எல்லோருமாய் திருப்பதி உண்டியலை நிரப்பவும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடவும் செய்த அதி புரட்சியை செய்திருக்கிறhர்கள் பிராமண அறிவாளிகளும் இயக்குநர்களும். மறந்து போன திராவிட வரலாற்றை யார் சொல்லி கொடுக்க போகிறhர்கள் திராவிடர்களுக்கு எதன் மூலம் சொல்லிக் கொடுக்க போகிறhர்கள் அதே சினிமாவாளா.... கொஞ்சம் நெஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் திராவிடத்தையேனும் காப்பாற்றினாள் சரி. அந்த ஆறு ஜhன் முழம் எல்லாம் தாண்டி இன்னும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. யாருக்காவது நீச்சல் தெரியுமா......
2 comments:
இஸ்லாம் சமூகத்தை சொல்லும் போது, அவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்ற தாக்கத்தை எவ்வளவு அழகாக அத்தனை மக்களின் மனதிலும் ஏற்படுத்திவிட்டது.
Not only in INDIA....Worldwide why its is like that.....Do you feel all pappan nais did this???????
நல்ல ஆய்வு..
பாரதிராஜா போன்ற விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்களே.
Do you need "word verification" when comment moderation is enabled? It is a hassle in commenting.
Post a Comment