Wednesday, August 29, 2007

வலை பூக்கள்

வரிகளாய் பாயும் வசைமொழிகள்
நவரச விருந்துகள்
விழிகளுக்கு விருதுகள்
பாசானமும் இருக்கலாம்..

கற்பனை சேர்க்கும் போது
வெறும் வாயும் இனிக்கும்
கற்பனை கடந்து கொட்டும் போது
உள்ளுணர்வினால்
உண்மையும் நடுக்கம் கொடுக்கும்

மனிதனுக்கு வலைபோட்டு
கொசுவை தடுக்கும் நல்லவர்கள் நாம்
வலை பூக்களில்
தற்பெருமைக்கு தேவையிருக்காது.

ஏதேதோ தெரிகிறது
என்று படித்துவிட்டு போகவோ....
ஏதேதோ தெரிகின்றது
என்று எழுதிவிட்டு போகவோ.....

மஞ்சளும் சிவப்பும் கலந்த
காலைச் சூரியன்
மப்பும் மந்தாரமும் நிறைந்த
மாலைக் காரியம்
எப்போதும் மலரும் மத்தாப்பு....

கத்தரியாலும் மலராலும்
பலவாய் செய்தது நாக்கு...
கடிவாளம் போடமல் எழுதினால்
நகக்கண் அழுகும்.

என் காதலியை அன்று
சந்தித்தேன் மழை நின்றிருந்தது
அவள் காலடியில் கொட்டியிருந்த
குளி துளி சிறிய நீர் குட்டைகள்

என்ன அழகானவள் என்று
வஞ்சிக்க நினைக்கிறhன் வானன்
அவள் நடக்கத்துவங்கியிருக்க
வானம் துண்டுகளாக அந்த நீர்க்குட்டையில்

எனக்காக உருவானவள் நன்றhக
தெரிவார்கள் அவர்கள்
அறிந்தவருக்கு அடியேனின் வேண்டுகோள்
ரசிக்கவலள் என்னவள்
நான் மட்டும் ரசித்துக் கொள்கிறேன் அவளை
மற்றவர்களுக்கு அவள் தங்கை முறை

ரோசாப் பூக்களை பரிசாய்தந்து
என் காதலை வளர்த்தேன்
இந்த வலைப் பூக்களை இப்போது
அவளுக்கு தரப்போகிறேன்
நான் தந்தாள் அது அவளுக்கு வனப்பு
நீங்கள் தந்தாள் அது மறைப்பு முறைப்பு ஆப்பு

ரசிக்கலாம் உலகை உலகத்தாரோடு சேர்ந்து
வலைப்பூ தொடுத்து வலைப்பூ கொடுத்து

சினிமாவின் கேமரா கண்களுக்கு இலங்கைத் தமிழர்களின் கலாச்சாரம் கிடைக்கவில்லை

சினிமாவின் வரலாற்றுப்பக்கங்களைப் புறட்டும் போது, பிரான்சும் அமெரிக்காவும் சமகாலத்தில் வளர்ந்தாக சொல்கிறது. ஏன் போரட்ட நிலையில் இருந்த போதும் கூட தங்களுகளுக்காக பயன்படுத்தி வளர்ச்சி கண்ட ரசியாவையும் ஜெர்மனியையும் இன்னும் இத்தாலி, சுவீடன் என்று நல்ல வளர்ந்த நாடுகள் பலமான ஆயுதமாக திரைப்படத்தை மாற்றிக் கொண்டன. தங்களுடைய வளர்ச்சிக்கும் பக்குவமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் பயனாக வாசிப்புப் பழக்கம் இல்லாத பலரை திரையில் வாசிக்க வைக்க முயன்ற ட்ருபோ,கொடார்ட். விக்டோரியா டி சிகா, என்று ஆரம்பித்து இன்று சினிமா, உலகின் பல இடங்களிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இதற்கு ஆதாரம் ஈரான், கொரியா போன்ற நாடுகளில் இன்று நல்ல சினிமா வளர்ந்து வருகிறது.
இதனால் உலகத்திற்கு கிடைத்த ஒரே நன்மை உலகத்தின் எக்கோடியின் மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்வதே கிட்டத்தட்ட வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை பிறக்கவும், ஏன் ஆவணப்படுத்தப்பட்ட நானுhக் ஆப் த எர்த் என்ற படம் இக்லுhக்கலின் (பனிவாழ் மக்களின்)வாழ்க்கையைக் கூட சொல்லிவிட்டது. ஆனால் காலனி ஆதிக்கத்திற்கு கீழ் இருந்து மீண்டு புத்துயிர் பெறுவதற்குள் ஏற்பட்ட பெருந்துயரால், இலங்கை என்ற வைர பிரதேசத்தின் அவ்வாழ் மக்களின் வாழ்க்கையும் பாரம்பாரியமிக்க கலாச்சாரமும் காணாமல் போய்விட்டது.
கிட்டத்தட்ட இப்போது உலகம் முழுவதும் வந்தடைந்துவிட்ட மெல்கிப்சனின் அப்பகலிப்டோ வரை அமெரிக்கப்படங்கள் அவர்கள் இல்லாத மற்ற நாட்டைய மற்ற இனத்தைய மக்களை படம் பிடிக்கவே செய்திருக்கிறhர்கள். அதற்கும் இலங்கையில் வக்கற்று போய்விட்டது. காரணம் யாவரும் அறிவோம். மலேசியா முதல் சிங்கப்பூர் முதல் பிரேசில் வரை பிரிட்னிபியர்சு முதல் சோபியா லாரன்சு வரை வெங்கா பாய்சிலிருந்து உள்ளுர் ராக் வரை அத்தனையயையும் பயன்படுத்தி எங்கள் ஊருக்கு வாருங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் என்று இல்லாததையும் உருவாக்கி கூவி கூவி வித்துக் கொண்டிருக்கிறhர்கள் உல்லாச பயணத்தை. ஆனால், இலங்கை இயற்கை தந்த மாபெரும் கொடை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலையில் மேற்படி பிரச்சினை மற்றும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரத்தில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும், கேமராக்களை துhக்கிக் கொண்டு அழகியலைத் தேடி அலையும் கண்களுக்கு விருந்தாகி இலங்கை எப்போதோ வளர்ந்திருக்கும் சுவிட்சர்லாந்து எனும் நாடு தான் உலகிலேயே மிகப் பணக்கார நாடு என்பது எல்லோரும் அறிந்திருக்கலாம் அங்கு வசிக்கும் குடிகளுக்கு ஆண்டொன்றின் சராசரி வருமானம் மட்டும் 42000 ருபாய்க்கும் அதிகம். அதன் முக்கியத் தொழில் சுற்றுலா. அந்நியச் சலாவணியின் மதிப்பால் இன்று அந்த நாடு அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறது. ஆனால் நம் இலங்கை கேமராவின் கண்களுக்கு நம் கலாச்சாரம் வேறு மாதிரியாகத் தான் தெரிகிறது. பணக்கார அகதிகள், ஏழை அகதிகள் என்று தரம் பிரித்து வகைபார்த்து அலைக்கழிப்பதை ஆவணப்படுத்தவும் தலையங்கம் கிடைக்குமா என்று காத்துக் கொண்டு சிவப்பு நிற டின்ட் ஏறிய நிலையிலான பகுதியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன உண்மையான கலாச்சாரம் காலச்சக்கரத்திற்கு மட்டுமல்ல எல்லோரையும் போன்ற திறமையும் திறமையையும் புராதண கலாச்சாரத்தையும் இயற்கை அன்னையின் மடியையும் கொண்டிருக்கும் நம் நிலத்தை நோக்கிய நம்முடைய சிந்தனையோடு கேமரா கண்களும் மகிழ்ச்சி நாளை சூட்டுச் சத்தம் நிற்கும் அந்த நாளை சுடக் காத்திருக்கிறது.

பள்ளிக்கூடம் விமர்சனம்

நல்ல சினிமாக்களின் எண்ணிக்கை வர வர தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே போகிறது. அதை, திருத்துவதற்கு எங்களைப் போன்ற சிலரால் மட்டுமே முடியுமென்று மார்தட்டிக் கொள்ளும் தங்கர் பச்சானிடமிருந்து வந்திருக்கிறது மற்றுமொரு சினிமா(சினிமா தானா என்பதை பிறகு முடிவு செய்யலாம்).
தமிழக மக்களின் கலாசாரத்தை அப்படியே காட்டுகின்ற எங்களை மக்கள் ஆதரிப்பதில்லை. ஏமாற்றி விற்கும் பொருள் போன்ற மசாலாப்படங்களை மட்டுமே அவர்கள் விரும்புகிறhர்கள். என்பதாக அவர் எண்ணத்தில் பட்டதோ என்னவோ அழகான கதையமைப்பு கொண்ட ஒரு வடிவத்தை முடிந்த அளவிற்கு வியாபார முலாம் பூச நினைத்து மணக்கும் பொருளில் எதையோ சேர்த்து விட்டார் தங்கர்பச்சான். இதில் இரண்டு விசயங்களை பேசலாம் ஒன்று கதையமைப்பு மற்றெhன்று தொழில் நுடபம்
கதையமைப்பு :
எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாத கதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறhர். கிட்டத்தட்ட வாழ்க்கையின் இன்றியமையாத பொருளாக கல்வி சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்நாட்களில் ஏறத்தாழ நம்மிள் பெரும்பாலானோர் பள்ளிகூடத்தையும் அது தரும் மறக்க முடியாத அனுபவத்தையும் மனசுக்குள் அடக்கிக் கொண்டிராமல் இல்லை. அந்த நினைவுகளை அசைபோடத்தான் மின்னல் வேகத்தில் ஒடும் இந்த உலகில் நேரமில்லை. அந்தக் குறையை, இந்த படம் தீர்க்கும் என்று பலரும் நம்பி போயிருப்பார்கள் காரணம் அழகி என்ற இவருடைய ஒரே உருப்படியான படம் ஏற்படுத்திய தாக்கம் அது..ஆனால் திரையில் நடந்ததோ வேறு
பள்ளியில் சேர்ந்து படித்த போது உருவான ஒரு காதல் nஜhடி பள்ளியின் சாரித்திரமே அழியப்போகிறது என்ற நிலையில் வாழ்க்கைத் தரம் உயர்ந்த நிலையில் காதலன் பள்ளிக்கு வர. இந்தக் கால இடைவெளியில் அவள் மீதான காதலால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு. என்ற கதை ஓட்டத்திற்கு பின்புலமாக அமைந்திருப்பது பாழடைந்த நிலையில் இருக்கும் பள்ளியை சரிசெய்ய அதன் முன்னாள் மாணவர்களை திரும்ப அழைத்து (நல்ல நிலையில் உள்ளவர்களைமட்டும்) அந்த பள்ளியை சரிசெய்ய அரசிடம் அனுமதியும், அவர்களிடம் பண உதவியும் பெறல். கதை கேட்பதற்கு வேண்டுமானல் நல்ல கதையாக தோன்றலாம், ஆனால் காட்டியது.
எம்.சி.ஆர் போல ஆடுகிறhர், என்ற போர்வையில் கேவளமான ஒரு நடனத்தையும், இரண்டரை மணிநேர சினிமாவை கூத்தடிக்கவும் தான் காட்டியிருக்கிறhர் தங்கர்.
தங்கருக்கு நடிக்கத் தெரியாது என்று தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியிலேயே நிருபித்துவிட்டாரே! பிறகேன் மீண்டும் மீண்டும் தன் முக்கை தானே உடைத்துக் கொள்கிறhர் என்றே தெரியவில்லை. இதில், அவர் கூட சேரும் மற்றெhரு ஆள் நரேன். சித்திரம் பேசுதடி படத்தில் டைரக்டர் சொல்லத்தான் அப்படி நடித்தாரோ என்று நினைத்தேன் நரேனை. ஆனால், ஏனோ இந்த படத்திலும் அதே போல பிதாமகன் விக்ரமைப் போலவே நடக்கிறhர். எந்த அடிப்படையும் புரியாமல் திரைக்கதை பொத்தலால் திரையரங்குக்குள் கூட ஒழுகுகிறது. ஒரே ஆறுதல் படிக்காமல் வேதனைப்படும் மக்களின் வலியைச் சொன்னது. திரைக்கதையில் விட்ட இடத்தை தொழில்நுட்பத்தால் சரி செய்யவும் முடியவில்லை போல.
அழகிபடம் வந்த போது பரவலாக திரைவல்லுனர்கள் பேசிய வார்த்தை யாதெனில்? அழகி என்ற நல்லக் கதையம்சம் கொண்ட ஒருபடத்தை தொழில் நுட்பரீதியாக கோட்டை விட்டுவிட்டார் என்று. அந்த படம் மட்டும் தொழில்நுட்பம் குறைந்த பட்சமாகவேனும் சரியாக இருந்திருந்தால் பல நாட்டு திரைபடத் திருவிழாக்களில் விருதுகளை குவித்து தமிழ் படத்தை உலக அளவிற்கு கொண்டு சென்றிருக்கும் (தொழில் நுட்பம் என்பது திரைக்தையிலும் உள்ளதென்பதை திரைப்படக்கல்லுhரியில் பயின்ற தங்கர்பச்சானுக்குத் தெரியாமல் இருக்காது)அந்த படத்தில் இருந்த குறைந்த பட்ச தொழில்நுட்பம் கூட பள்ளிக்கூடத்தில் இல்லை என்பது மறுக்க முடியவில்லை. அழகி கதை அளவில் பாதித்ததில் அதை நம்மால் மறக்க முடியவில்லை. கதை உட்பட அத்தனையும் கெட்டதால் நல்ல படம் இப்படிக்கெட்டுப் போனதே என்று இந்த படத்தையும் மறக்க முடியாதபடி செய்துவிட்டார் தங்கர் அவர்கள். ஒருவேளை இது நல்ல கதைதான் என்று உணரும் வருங்கால இயக்குனர்கள் யாரேனும் சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தை மீண்டும் எடுக்கலாம்.