Saturday, August 23, 2008

விலைதான் அமோக விளைச்சலடைகிறது.



25.07.08
சென்னை
அன்புள்ள அப்பாவுக்கு,
நான் நலம் வீட்டில் எல்லோரும் நலமா . அடுத்த மாதத்திலிருந்து எனக்கு 1000 ருபாய் கூடுதலாய் அனுப்பு நீ அனுப்பு 1500 ருபாயைக் கொண்டு இங்கே சென்னையில் ஒன்றும் செய்வதற்கில்லை. இரண்டு ஆண்டுக்கு முன்பு நான் கலேஜல் சேர்நத போது எவ்வளவு பணம் அனுப்பினாயோ அதே அளவு இப்போதும் அனுப்பினால் எப்படி. 1.50க்கு விற்ற இட்லி 2.50 ஆயாச்சு, 3 ருபாயிருந்த பரோட்டடா 5 ருபாயாயாச்சு 6க்கு விற்ற துணிச்சோப்பு 10 ஆயாச்சு 500 வாடகை 2000 ஆயாச்சு ஆனால் நீ கொடுக்கும் காசுமட்டும் அதே 1500ஆகவே இருக்கிறது நான் என்ன செய்யட்டும். கூடப்படிக்கும் பசங்கள் எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறhர்கள் நான் இவர்களையெல்லாம் பார்த்து கூச்சபட்டு போகிறேன் எனக்கு ஒரு செல்போன் வாங்க காசு சேர்த்து அனுப்பிவை.
இப்படிக்கு
சிலம்பு


01.08.08
சித்தக்கூர்,

அன்பு மகன் சிலம்புவுக்கு,
அப்பா எழுதிக் கொள்வது இங்கு எல்லோரும் சுகம் உன் சுகத்தை பார்த்துக்கொள் . கடிதம் கண்டேன் வருத்தமாக இருந்தது பொருத்துக் கொள் அடுத்த மாதம் கூடுதல் பணம் அனுப்ப முயற்சிக்கிறேன். யாரையும் கண்டு ஒதுங்கி ஓடாதே அவர்களைப்போல் நாம் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள். நாம் படிக்க போயிருப்பது நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ள நீ உன் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு உனக்கானதை தேடிக் கொள்வாய் பின் எல்லாவற்றையும் தேடிக் கொள்வாய் என்று தான் படிக்க அனுப்பியிருக்கிறேன். செல்போன் இல்லை என்பது ஒன்றும் குறையில்லை யாராவது கேட்டால் சொல் இன்னும் தமிழ்நாட்டில் செல்போன் சிக்னல்கள் கிடைக்காத கிராமங்களும் இருக்கின்றன என்று, கிராமங்களுக்கு வந்து சேராதது செல்போன் சிக்னல் மட்டுமில்லை என்று நீ மனதில் வைத்துக் கொள். இரண்டு வருடத்திற்கு முன்பு 3 ருபாய்க்கு வாங்கிய கத்தரிக்காயை இன்றும் 3க்கு தான் வாங்குகிறhர்கள், 5ருபாய்க்கு வாங்கிய முருங்கைக்காய் இன்றும் 5ருபாய் தான் அன்று கூலி 80 ருபாய் இன்று அரிசியோடு சேர்த்து கூட்டினால் 80 தான் வருகிறது, அரிசி தான் மிச்சம். நம் நாட்டில் விலைதான் அமோக விளைச்சலடைகிறது. உடம்பை பார்த்துக் கொள்.ஆறhம்தேதி பணம் அனுப்புகிறேன்.
பாசத்துடன்
ராக்கன்

ஒரேபொருள்: லிங்கம்



தொழுகிறேன் கடவுளே
வரத்தைக்கொடு
தொட்டுவிட்ட
பெண்ஒருத்து செய்யும்
வேலைகளை
விட்டுவிட்டு - அவள்
அம்மா மியின் வீட்டில்
விட்டுவிட்டு
அடுத்தகாரியம் செய்ய
வரத்தைக்கொடு
கொழுவைத்து
கும்பிட்டோர்
கொழுக்கட்டையாய்
வைத்திருந்தாலும்
களைப்பாரும்
வேலை தீர்ந்து
கஞ்சிக் கமண்டலத்தில்
இளைப்பாரும்
யாராகினும்
லிங்கத்தை
தொழும்
ஆளிங்கனம்
இல்லாமல் இல்லை
கடவுளே - நீ
வரத்தைக் கொடு

Wednesday, July 2, 2008

நடிக்க கற்றுக் கொள்ளுங்கள் இந்த எட்டு பாவங்களையும் பயிற்சி செய்யுங்களேன், சமநிலைபடுத்தி.


கதையை உணர்ந்து கொண்டேன்
பாத்திரத்தை காதலித்தேன்
இப்போது நடித்தேன்..
இவன் நடிகன்

ஒப்பனை என்பது ஒப்புக்காக அல்ல
சரித்திர புருக்ஷர்களையும்
கற்பனை வடிவங்களையும்
கொண்டு இது இப்படித்தான் செய்யும் என்று
நடித்தால் அல்ல வாழ்ந்தால் அதுவும் நடிப்பு

நாடகம்
கொஞ்சும் மிஞ்சிய நடிப்பு
உணர்வுகளை சுண்டி வீரியமடையச்செய்யும்
அங்கே இசைக்கான பின்புலம் குறைவு

சினிமா
குளோசப்பின் உயர்ந்த தரத்தினைக்
கொண்டது அங்கே உணர்வுகள் சாந்தமடைகின்றன.
உள்ளுர ஒரு அழுத்தமான ஒரு தாக்கம் ஏற்படுத்துகிறது.
வாழ்ந்துவிட்டு போனால்தான் இசை
வாழ்க்கையை தாலாட்டிவிட்டு
அழுத்தமான பதிவினை விட்டுச் செல்லும்
இல்லாது போனால் காலம் கடந்தாலும்
கூட நடக்க, பொருந்தாத நடிப்பிற்கு சத்து இருக்காது.

சிவாசி கணேசின் நடிப்பிற்கு நம்மிள் பலர் இன்று சிரிக்கிறேhம்
1943 ல் வெளிவந்த சிட்டிசன் கேன் என்ற படத்தில் ஆர்சன் வெல்சினுடைய
நடிப்பினை பார்த்து இன்று அவர் நடித்தது போலவும் அந்த படம் இன்று எடுத்தது போலவும் தான்
தோன்றுகிறது எனக்கு


நடிக்க மறந்து போனாலே நடிப்பு வந்துவிடும்

இமிடேசன் நடிப்பு என்பது காப்பிஅடிப்பது என்றhலும்
அது ஒரு வகையான நடிப்பு... ஆனால் அது உண்மையான நடிப்பாகாது

உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதபிம்பமே நடிப்பு..

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, உவகை, பெருமிதம்
இவற்றை சமநிலைபடுத்துதல் நடிப்பு

நடிக்க கற்றுக் கொள்ளுங்கள் இந்த எட்டு பாவங்களையும் பயிற்சி செய்யுங்களேன், சமநிலைபடுத்தி.

Sunday, June 15, 2008

வாருங்களேன் சினிமா பழகலாம்்




நான் என்னத்தை தான் எழுதப்போகிறேன் உண்மை தெரியவில்லை
என் எண்ணத்தையா தெரியாது
உண்மை பேச குசுவந்சிங்கும் ஜெயக்காந்தனும் தான் வேண்டுமா!
நான் அவர்கள் இல்லை ஆனால்!
உங்கள் எல்லாரையும் போல ஒருவன் அவ்வளவே
ஆனால் சினிமாவால் ஆனவன்
சினிமா படித்த மாணவன்

சினிமாவோடு தூங்குகிறேன் சினிமாவோடு விழிக்கிறேன்
சினிமாவோடு சிரிக்கிறேன் சினிமாவோடு நடக்கிறேன்
சினிமாவோடே தான் இருக்கிறேன்
இப்போது உங்களோடு அறிமுகம் ஆகிறேன்
ட்ருபோவோ கொடார்டோகுரோசோவபவோ
புடோவ்கினோஜேம்சுகேருனோ சிபீல்பர்க்கோசிட்டிசன் கேனோ சாமுராயோ
பென்கரோ பிரேவ்கார்டோபைசிகிள் தீவ்சோ பதேர் பாஞ்சாலியோ
இதெல்லாம் பார்த்து வளர்த்த சிறிய மூளையுடையவன்
சிறியதே.......

வலைமலரில் அறிமுகமாகிறேன் சினிமாவோடு பேசலாமென்று
கேமராவின் பட்டை லென்சு கூர்பேனாமுனையைக் காட்டிலும் கூர்ஆனது
எல்லோருக்கும் எளியேனின் வணக்கங்கள்;'

சினிமா சிரிக்க வைக்கும்
சினிமா ரசிக்க வைக்கும்
சினிமா அழ வைக்கும்
சினிமா நிறைய பேசவைக்கும்
சந்தோசமாக, ஆக்ரோசமாக

சினிமாவை என்னுடன் சேர்ந்து விவாதியுங்களேன் தெரிந்ததை சொல்கிறேன்
இல்லையென்றhல் தெரிந்து கொண்டு சொல்கிறேன்.

சினிமாவின் உங்கள் சிந்தனைகளை எனக்கு தெரிவியுங்களேன் நானும் கற்றுக் கொள்கிறேன் .
இன்னும் கொஞ்சம்

எல்லாம் அறிவாரோ ப.சிதம்பரம்....


பெட்ரோல் விலையைப் பற்றி பேசுவதற்கு பதிலாக...

வீட்டுக்குள் முடங்கிகிடக்கலாம்
விலையேற்றத்திற்குக் காரணம் பெட்ரோலின் விலையேற்றம் தான் என்று
ப.சிதம்பரம் பாட்டுப்பாடுகிறhர் உண்மையில் பெட்ரோல் விலைஏற்றப்பட்ட
ஆறுமாத காலத்திற்கு பின்னும் தொடர்ந்து விலை கூடிக்கொண்டே போனதற்கான
காரணம் பெட்ரோல் விலை ஏற்றத்தின் விலைவுதானா என்ன
உலகச் சந்தை கச்சா விலையின் பாதிப்பு
உண்மையில் நம்முர் சந்தையில் எதிரொலிப்பதை யாராலும் தவறhக சொல்லமுடியாது
ஆனாலும் அதில் உண்மையிருக்கிறது.
அதையும் தாண்டி ஏதோ ஒன்று விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கிறது
அது எனக்குத் தெரியவில்லை ஒரு வேலை ப.சிதம்பரத்திற்கு தெரிந்திருக்கலாம்.
அவர் தானே நிதியமைச்சர் அவர்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

Wednesday, May 28, 2008

கர்நாடகத்துல கலர் பேயி....


ராமா, கிருஷ்ணா, கோவிந்தா
ஆர்யப் பேயி திராவிடத்துல புடிச்சு ஆட்டுது

புராணக்கதை சொல்லி புத்தியக்
கெடுத்த புண்ணியவான்களா...
காசி, ராமேஸ்வரத்துக்கும் போங்கோ....

திராவிடத்தை அழிச்சுப்புட்டீங்க..
யாரு கேக்க இருக்கா..
அவன் கடவுள் முருகன்
முருகன் ஒரு போர்வீரன்..
இதெல்லாம் அவனுக்கே தெரியாதே

சரஸ்வதி, லெட்சுமி, பராசக்தினு
காட்டி காட்டியே அவனக் கெடுத்துப்புட்டீங்களே..

இவன் என்னப்பா காட்டுக்குள்ள திரிஞ்ச
பயகதானேன்னு மட்டும் பேசுவீய..
அதுநாள தான் அவனுக்கு ஆசை வார்த்தை
காட்டி..
பப்ளி முட்டாயி வாங்கிக் கொடுத்து
கர்நாடகத்தை வாங்கிக்கிட்டீக..
சூப்பரப்பு.. சூப்பரப்பு.....
போயிக்கிட்டே இருக்கு... திராவிடம்..

Monday, May 26, 2008

கோடிக் காதலர்ளுக்காக தேய்ந்தேன்..... நிலா



மரணத்தை வைத்து பாடாய் படுத்தும்
மதங்களாகட்டும் மனங்களாகட்டும்
விட்டுப் போகும் வெறுமையாகட்டும்
எல்லாமும் போய்விடும் நாள் உண்டு

மரணம் எல்லோருக்கும் கண்டிப்பாக வாய்க்கப் போகிற ஒன்று
அதன் மீதான விசாரிப்பு ஏதும் யாருக்கும் ஏற்படாமலில்லை
அந்த நடு இருளில் மொட்டை மாடியில்
நிலவின் ஒளி கண்களோடு பேசிக்கொண்டிருந்த வேளை

எத்தனையாயிரமாய் பேர்கள் உன்னுடன்
காமம்பார்வை வீசியிருப்பார்கள்
எக்கோடியோ மக்கள் உன்னை
ரசித்துச் சிரித்திருப்பார்கள் அவர்கள் எங்கே

அந்தக் கனவுகள் சுமந்த சதைப் பிண்டங்கள்
எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்து போன
மாயையர்கள் எங்கிருக்கிறார்கள் இப்போது
நான் கேட்ட கேள்விக்கு வெட்கப்பட்டு ஒடிவிட்டது நிலா

நான் இப்போது அதன் காதலனாம்
அதுதான் வெட்கப்பட்டு ஒடுகிறாள் நிலவம்மணி
நானும் வெறும் சதைப்பிண்டம்
நாளைக்கே காணாமல் போவேன்

நான் எத்தனையோ முறை விதவையானேன்.
ஒருநாள் உனக்காக வெறுமையாகுவேன்
உனக்காக தேயும் நாளும் வரும் என்றாள்
மாதா மாதம் அவள் தேய்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

யார் யாருக்காகவோ......

விடுதலைப்புலிகள்- அமெரிக்கா



ஒவ்வொருநாளும் ஏற்படும் உயிரிழ்ப்புகளைக்கண்டு
எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளாத
சிங்கள வெறியரசின் வேசங்கள் அத்தனை அற்புதம்

இந்தியாவிலிருந்து பொருளுதவி வேண்டுமென்றால்
முதல் நாள் பேச்சவார்த்தைக்கு வரும்படி அழைப்பார் பக்சே
இங்கிலாந்திலிருந்து பொருளுதவி வேண்டுமென்றால்
எங்கள் நாட்டின் நிலையைப் பாருங்கள் நாங்கள் மிகநல்லவர்கள்
பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் வரமாட்டேன் என்கிறார்கள்.
அருமையாக நடிக்கிறார்.

ஆனால், நான் சூழுரைக்கிறேன் அவர்களை ஒழிப்பதே
என் முதல்நோக்கம் என்பார் உள்நாட்டு அரசியல் கூட்டத்தில்

ஒவ்வொரு உயிரின் அருமையும் உலகத்தில் உயர்ந்து நிற்கவே
துடிக்கிறது. ஆனால் தினந்தினம் உயிரிழப்பு.
பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்று
அமெரிக்கர்கள் புதிதாக கண்டுபிடித்துவிட்டார்கள்.
எல்லா தமிழர்களுக்கும் தேவை அமைதிதான்.

ராஜபக்சேவுக்கு சொல்லவேண்டிய அறிவுரையை
விடுதலைபுலிகளுக்கு சொன்னால் எப்படி அது சரியாகும்.
ஏன் எதாவது வியாபாரம் புதிதாக தொடங்கியிருக்கிறீர்களா....

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அடுத்த நொடியில்
சிங்கள வெடிகுண்டுகளுக்கு கால்முளைத்து தமிழர்பகுதிக்குள் நடந்து வருகிறதே.
என்ன செய்வார்கள் உங்களிடம் வேறுஏதாவது ஐடியா இருக்கிறதா...

நீங்கள் திட்டாத திட்டு இல்லை மாவோயிஸ்டுகளை
நேபாளத்தை பாருங்கள் மக்களின் முழுமையான அரசாக
மலர்ந்திருக்கிறது இன்றைய மாவோயிஸ்டு
என்ன வியாபாரத்தில் மந்த நிலையா..
திடீரென புதுமுகமாய் அறிமுகமாய்....

நான் சத்தியமா இந்தியாவோட அரசியல்வாதி நம்புங்க..


ஒரு சீட்டுக்கேட்டா நிக்கவா உக்காரவானு நக்கலடிக்காதீங்க...

நான் உண்மையான அரசியல்வாதிதாங்க..
எனக்கு மார்க்ஸையும் தெரியாது ஏஞ்சல்சையும் தெரியாது
பாசிசமும் தெரியாது நாசிசமும் தெரியாது.
சேவையும் தெரியாது மாவோவையும் தெரியாது.
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

35% வாங்குனவங்க அதிகமக்களோட ஆதரவுல இருக்காங்க
ஆனா 50 சீட்டுதான்
26% ஆதரவோட இருக்குர நமக்கு 115 சீட்டுல
நாம எப்படி ஆட்சி செய்யலான்னு நான் கேக்கமாட்டேங்க
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

மாசத்துக்கு 50,000 ரூவா கவர்மெண்டு வசதி
வருசத்துக்கு 5,00000 ரூவா கவர்மெண்டு வசதி
அடிக்கிற காசுல 50% தலைவருக்கு
அடிக்கிற காசுல 20% மாவட்ட தலைவருக்கு
அடிக்கிற காசுல 10 சதவீதம் பகுதி தலைவருக்கு
மிச்சம் மீதி ஏதோ...
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு.

குரலெடுத்துக் கத்துனேன்னா நாலுகல்லு தாண்டிநிக்கிற
எருமைகூட அரண்டு போகும் பார்லிமெண்டலயோ சட்டசபைலையோ
கத்துனா எப்படி அருமையா இருக்கும் எனக்கு குஸ்தியும் தெரியுங்க
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

கட்சிக்காரனுக்கு கிடைக்காத காசு மக்களுக்கு எதுக்கு
அவனுக்கு கொழுத்த காசு கிடைக்கிற மாதிரியே நான்
ரெண்டு மூனு ரோசனை வச்சிறுக்கேன். அதையே திட்டமாக்கிருவோம்.
அப்பறம் எம்மயன் 700 மார்க் தான் வாங்கியிருக்கான்.
அமெரிக்கா போவனுமாம் ஐஐடில படிக்கனுமா எதாவது சட்டத்துல
இடத்தை ரெடிபண்ணனும்ல...
எம்பொண்டாட்டிக்கு அந்த தாஜ்மஹால பாக்கணும்னு கொள்ள ஆசை
நான் எம்.பி ஆயிட்டா பக்கத்துல தானே இருக்கு பாத்துட்டு வந்துருவோம்ல.
ஒரே ஒரு சீட்டுதானே...
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

Saturday, May 24, 2008

போதை....



தண்ணியடிக்காதீங்க,
தண்ணியடிக்காதீங்கண்ணு சொன்னா கேக்குறீங்களா....
இப்ப என்ன ஆச்சு செத்தீங்களா... இப்படீனு ஒரு நாளைக்கு சாராயமே வந்து சொன்னாலும் சொல்லும்..

கள்ளுக்குடிக்கிறது... தமிழனோட கலாச்சாரம்
வெள்ளக்காரன் கண்டுபிடிச்சது மதுவில விபச்சாரம்
கலாச்சாரம் மாறிப்போயி கலர்சாராயம் குடிச்சீங்க.
கல்லீரல் வெந்துபோனது உங்களுக்கே தெரியாது
சைனாக்காரன் கண்டுபிடிச்ச சாராயம்(கள்ளத்தனமா)
சப்பிப்போட்டு பொனமா ஆனீங்களே... ஐயோ....
நாடுமறித்தனத்தை இப்பவாச்சும் மாத்துங்களேன்.

ஒழிஞ்சுக்கிட்டு குடிச்சிக்கிட்டுருந்த காலம் போயி
ஒய்யாரமா வீட்டுக்குள்ள கடைபரப்பும் கண்ணியவான்களே
அது கள்ளச்சாரயம் தானேன்னு கனவுகாங்காதீங்க..
அது ஒரே நாளுள கொன்னுச்சு
இது ஒவ்வொரு நாளும் கொன்னுக்கிட்டு இருக்கு

அரசாங்கத்துக்கு வருமானம் வருசத்துக்கு 8,800கோடி(தமிழ்நாடு)
சுகாதாரத்துக்கு செலவீனம் வருசத்துக்கு 7,000கோடி.
ஆகா... அரசாங்கத்துக்கு லாபங்க அதான்....1,800ன்னா சும்மாவா..
நீங்க குடிங்க... குட்டிச்சுவரா போங்க....

போதையில மெதக்குறதுக்கு மதுமட்டும் தானா ஆதாரம்
ஐயோ.. ஐயோ.....

Friday, May 23, 2008

நீங்கள் பத்திரிக்கையாளராக வேண்டுமா?



1. தினந்தோறும் பத்திரிக்கை படிக்கவேண்டும்.
2. அரசியல் நடப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்
3. எழுத்தின் பலத்தினை அறிய இலக்கியத்தில் அறிவு வேண்டும்
4. எழுத்துக்களை பிழையின்றி எழுத இலக்கண அறிவு வேண்டும்.

மேற்கூறிய எதாவது ஒரு தகுதியிருப்பின் நீங்கள் பத்திரிக்கைக்கு லாயக்கு இல்லாத ஆள்....

1. செக்ஸ் விசயங்கள் கலந்தபடி உங்களால் எழுதத்தெரியவேண்டும்.(இலக்கணம் தேவையில்லை)

2. சினிமாக்காரர்களை ஜால்ஜா பண்ணி அவ்வப்போது பேட்டி எடுக்கத் தெரியுமா கூடவே அவர் பேசாத வார்த்தைகளையும் சேர்த்து அவர் திருப்பிக்கேட்டால் நீங்கள் தான் பேசினீர்கள் என்று சமாளிக்கத் தெரியவேண்டும் கூடவே அவரை அரசியலுக்கு இழுத்து வரவேண்டும்.

3. கொலைநிகழ்ச்சிகள் என்றால் போலிசுக்கே வராத கோணத்தில் உங்களுக்கு கேள்விகள் தோன்றவேண்டும். (அப்பாவிகள் என்றால் விட்டுவிட முடியுமா)

4. அவர்கள் சம்மதம் இல்லாமலே போட்டோ எடுக்கத் தெரியவேண்டும்.

5. மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விசயங்களை தேட வேண்டும்.

6. எந்த காரணம் கொண்டும் நீங்க நாட்டின் வளர்ச்சியை பற்றின கட்டுரைகளை எழுதக்கூடாது.

7. வெளிநாட்டுப் பத்திரிக்கையில் வேலை வேண்டுமென்றால் பிரபலமாக நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியையோ அல்லது நபரையோ பற்றி நீங்கள் ஊகிக்கும் செய்திகளை விரிவாக்கி பத்திரிக்கையை பெயர்வாங்க செய்திட வேண்டும்.

8. கவர்ஸ்டோரி என்றால் நமீதாவிற்கு எறும்புகடித்தது ஒரு எக்ஸ்குளூசிவ் டிப்போர்ட் என்பது போன்றோ அல்லது ஊழலில் சிக்கி சின்னாபின்னமான அரசியல் வாதியை பற்றியோ எழுதவேண்டும் அல்லாது போனால் மேற்கூறிய தலைப்பு சார்ந்தும் கவர்ஸ்டோரி எடுக்கலாம்.

தயாராகிவிட்டீர்களா...

உங்களுக்கு அருமையான வாழ்க்கை காத்திருக்கிறது..

1. போலிசுகாரரிடம் இனி லஞ்சம் அழுகத் தேவையில்லை
2. அரசாங்க அலுவலகங்களில் வேகமாக வேலைநடக்கும்.
3. ரெக்கமன்டேசனுடன் எந்த காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.
4. நடிகர்களை பேட்டி எடுக்கப் போனால் கவர் கிடைக்கும்.
5. கூடவே விற்பனைக்கு உதவிய வகையில் சம்பளம் அல்லாத வகையில் நீங்கள் எழுதிய முறைக்கு தக்கபடி காசு கிடைக்கும். (எ-கா) நமீதா எக்ஸ்குளூசிவ் -- ரூ.500 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வழி -- ரூ.100

நான் நடிகன் அவன் திருடன்





என் போன் நம்பர் உங்களுக்குத் தெரியுமா? 94444 மற்றதை சொல்ல மாட்டேன், நீங்கள் அடிக்கடி போன் செய்து என்னை தொந்தரவு செய்வீர்கள். ஆனால் ஒரு முறை என் நம்பரை சொன்னாலே யார் மனதிலும் உடனடியாக பதிந்துவிடும். அந்த நம்பரை வாங்குவதற்காக என்றோ ஒருநாள் தொலைப்பேசித்துறையின் விழா ஒன்றில் நடிகன் என்றமுறையில் சிறப்பு விருந்தினனாக கலந்தகொண்டபோது நண்பராக கிடைத்த மண்டல மேளாலரின் பரிந்துரையின் பேரில் கிடைத்த பேன்ஸி நம்பர்.
ஒரு நாளைக்கு என் போன் மட்டும் என்னிடம் இல்லையென்றால், என் வாழ்க்கையின் முக்கியமான நாளை இழந்துவிட்டேன். காரணம் நான் ஒரு வளரும் நடிகன் அவ்வப்போது வில்லன், அவ்வப்போது குணச்சித்திரன் ரொம்பப்பேருக்கு என்னைப்பிடிக்கும் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். ஒரு அழைப்பை விட்டாலும் என் வாழ்க்கையில் முக்கியமான இழப்பு. அந்த நம்பரை நான் இரண்டு நாட்கள் பிரிந்து இருக்கும்படி ஆகிவிட்டது, என் வாழ்க்கையில்.....
ரூ.45,528 கொடுத்து வாங்கிய காஸ்ட்லி செல்போன் மற்றும் ரூ.1000 மெமரி கார்டுடுடன் சேர்ந்து இருந்தது என் செல்போன். இன்டர்நெட்டில் விலை விசாரித்து, நண்பர்களிடம் பேசி, நம்பகமான வியாபாரிகளிடம் கேட்டு என் மனைவி எனக்காக முதன்முதலில் வாங்கித்தந்த பரிசு அந்த செல்போன். அதை கம்யூட்டராக கூட பயன்படுத்தலாம். அன்று நான் ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது யாரோ அதனை திருடிவிட்டார்கள். நிச்சயமாக திருடிவிட்டார்கள். தேடிப்பார்த்தபோது அது எனக்கு தெளிவாக புரிந்தது.
யாராரிடமோ கேட்டுப்பார்த்தேன் பயனில்லை வேறு வழியின்றி அந்த ஏரியா போலிஸ்ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். ஒருபடி மேலே போய் அந்த ஏரியாவிற்கான கமிஷனரிடமே போனைபோட்டு சொன்னேன்.(அவரும் எனக்கு நண்பர், நடிகன் என்றாலே அப்படித்தான்)
மறுநாள் காலையிலேயே எனக்கு போலிஸ் ஸ்டேஷனிலிருந்து என் மனைவியின் செல்லுக்கு அழைப்பு வந்தது. செல்போன் கிடைத்துவிட்டது. அவசரமாக ஓடினேன். 46,528 ரூபாயின் மதிப்பு எனக்குத் தெரியும். நடிகனாவதற்கு முன்னால் நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன், ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிப்பதற்கு எங்கள் உடல் உஷ்னத்தில் வேகவேண்டும். நேற்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. யாரெல்லாம் கூப்பிட்டார்களோ..... என் மனைவி எனக்காக வாங்கிக் கொடுத்த முதல்பரிசு இப்படி காணாமல் போய்விட்டதே... காசு யாருடையதாக இருந்தால் என்ன அந்தப் பரிசை வாங்கிக் கொடுத்த அன்பு அவளுடையதாயிற்றே!
ஸ்டேனஷனுக்குள் நுழைந்ததுமே வாங்கசார் வாங்க.. நல்வரவேற்றார் இன்ஸ்பெக்டர்... ஒருவன் ஓரத்தில் ஜட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அடி வாங்கிய தழும்புகள் நிறைய அவன் உடலில் இருந்தன, எல்லாம் பழைய வடுக்கள். இவன் தான் சார் எடுத்திருக்கான். டேய் சொல்லுடா... அவரின் அதட்டல் சத்தம் அடங்குவதற்குள் ஆமா சார்... ஆமா சார்... பதறினான் அந்த ஜட்டிக்காரன். எனக்கு வந்த கோபத்தில் அவன் கன்னத்தில் பொளேரென அறைந்தேன்.. எங்கடா என் செல்போனு... அவர், இங்க இருக்குசார்... குடுத்துட்டான்.
உண்மைதான் அது என் செல்போனை போலத்தான் இருந்தது. ஆனால் சிம்கார்டை காணவில்லை. எடுத்த உடனே கழட்டி வீசிருக்கான் சார், பரவாயில்லை நான் கம்பெனிக்கிட்ட பேசிட்டேன் இன்னைக்கு சாயங்காலமே... அதே நம்பர்ல சிம்கார்டு தர்றதா சொல்லிட்டாங்க.. இப்ப நீங்க செல்போன எடுத்துட்டு போங்க... இருங்க.... கொஞ்சம் பார்மாளிட்டீஸ் இருக்கு எல்லாத்தையும் நானே எழுதி கொண்டு வந்துர்றேன் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டு வாங்கிட்டுப் போயிருங்க.. கமிஷனருக்கும் போன் போட்டு செல்போன் வாங்கிக்கிட்டேன்னு சொல்லிருங்க. கொஞ்சம் இப்படி உக்காந்திருங்க வந்துர்றேன். செல்போனுடன் உள்ளே போனார்.
பக்கத்தில் ஜட்டியுடன் உட்கார்ந்திருந்த அவனை பார்க்கவே அருவருப்பாக இருந்தது, முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்தேன். எவ்வளவு பிரபலமானவன் நான், ஒருக்கடைக்கு போனால் கூட சார் உங்கள அந்தப் படத்துல பாத்தேன் சார், நீங்க சூப்பரா நடிச்சிருக்கீங்க... சார்.. எங்கவீட்ல இருக்க குட்டீஸ்க்கு உங்கள ரொம்ப புடிக்கும் சார் உங்கள மாதிரியே செஞ்சுக்காட்டுவாங்க... கூட்டமாக கூடிவிடுவார்கள்... என்னிடமே செல்போனை திருடுவதற்கு இவனுக்கு என்ன துணிச்சல்....
அண்ணே... குரல் கேட்டு திரும்பினேன். அவன் தான் அந்த திருடன் தான், என் வாழ்க்கையின் ஒருநாளை சாப்பிட்ட அந்த சட்டையில்லாத உடலான், சதையும் இல்லாத... அந்தத்தே........ என்னைக் கூப்பிட்டான். நல்லாயிருக்கியா.. இன்ஸ்பெக்டர் வருகிறாரா வரவில்லை என்பதை எட்டிப்பார்த்து உறுதிசெய்துகொண்டு, தொடர்ந்து பேசினான் புதுசா என்னப்படம்னேன் நடிக்கிற.... இதுல ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுன்னே, என் பொண்ணுக்கு உன்னை ரொம்ப புடிக்குமுன்னே, அவ இதைப் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா.. சட்டத்தை கசக்கி எரிந்திருந்த அந்த போலிஸ் ஸ்டேசனின் குப்பைப் பேப்பர் ஒன்றை நீட்டினான். ஏன்னேன் அப்படி பாக்குற... நான் திருடன் தாண்ணே, ஆனா உன்...... செல்போனப் போயி நான் திருடுவனாண்ணே... நீ நடிச்ச தலையூரு படத்தைப் பாத்துட்டு.. அதுல அடியாளுத் தலைவனா நடிச்சிருந்தப் பாருண்ணேன்.. என் மனசுலயே நிக்குதுன்னேன் இன்னைக்கும்... நீ எப்புடி அந்த படத்துல ரவுடி ஆனியோ அதே மாதிரி தான்னேன் நானும் ரவுடி ஆனேன். என் பிரண்ஸ§க அத்தனை பேரையும் என் செலவுல அந்தப் படத்துக்கு கூட்டிப்போனேன். அந்தப் படத்தை மட்டும் நான் 9 தடவை தியேட்டருல போயி பாத்தேன் தெரியுமா.... உன்னை மாதிரியே இருக்குறதா என் பிரண்ஸ¨க என்னையக் கிண்டல் பண்ணுவாங்கண்ணே.....

நான் திருடன் தான் அண்ணேன் ஆனா உன் செல்போன நான் திருடல அண்ணன்...

நான் திருடன் தான் அண்ணேன் ஆனா உன் செல்போன நான் திருடல அண்ணன்...

அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். திரும்ப திரும்ப அந்த வார்த்தை எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. என் சப்தநாடிகளும் அடங்கிப் போய்விட்டன.. அவனை அடித்த கை உதறல் எடுத்துக் கொண்டிருந்தது. போலிஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்தது வரை என்ன நடந்ததென்று எனக்குத் தெளிவாக தெரியவில்லை..
13 நாட்கள் ஆகியது, நான் என் உடல் நலம் தேருவதற்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு... 9 கிலோ என் எடை குறைந்து போனது.... தினம்தோறும் ஒரு மணி நேரமேனும் செல்போனை இப்போதெல்லாம் ஆஃப் செய்து வைத்து விடுகிறேன்.
காசு யாருடையதாக இருந்தால் என்ன அந்தப் பரிசை வாங்கிக் கொடுத்த அன்பு அவனுடையதாயிற்றே!

Thursday, May 22, 2008

புஷ்பேசியதில் சத்தியமாக தப்பில்லை அத்தனையும் உண்மை


இங்கே தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் தவறhன ஏற்றுமதிக் கொள்கைகள் காரணமாகத்தான் இந்த உயர்வு என்று
எதிர்க்கட்சிகள் வாதாடுகின்றன.

உண்மையில் இது உள்நாட்டுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றத்தின் விளைவு

*கடந்த சில ஆண்டுகளில் மட்டும் உயர்ந்துள்ள விமானப்பயணிகளின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி.

இந்தியாவின் பெருநகரங்களில் வளர்ந்துவிட்ட மென்பொருள் நிறுவனங்களும் மேலும்
out sourcing காரணமாகவும் ஒரு குறிப்பிட்ட சாரார்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது
பெரும்பாலான கார், செல்போன் கம்பெனிகளின் டார்கெட் இவர்களே
இவர்களின் வருமானம் அதிகமாகிவிட்ட காரணத்தால் இவர்கள் அதிக விலை கொடுத்து நல்ல
பொருட்களை வாங்க தயார் ஆக இருக்கிறhர்கள் இது மற்றவர்களை பாதித்ததோடு பொருளாதாரத்திலும்
பாதிப்பை கொண்டு வந்துவிட்டது.

1000 மதிப்பு வீட்டிற்கு 4000 கொடுக்க அவர்கள் ரெடி
2ருபாய்க்கு தயாராகும் தேநீர் 3 ரூபாய்க்கு வாங்கவே நமது பொருளாதாரம் இடம் தரும்
3 ரூபாய்க்கு தயாராகும் தேநீரை 15 ரூபாய் கொடுத்து வாங்குகிறhர்கள் அவர்கள்.

இதனால், 1000 ருபாயக்கு வாடகைக்கு இருந்தவன் இன்று 4000 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.்வாடகைக்கு இருந்தவன் 4000த்தை சரிக்கட்ட காய்கறிக்காரனாகவும், வேறு எந்த வியாபாரியாகவும் இருந்த போதும் விலையை உயர்த்துகிறhன். 5 ரூபாய்க்கு கிடைத்த இளநீர் சென்னையில் இன்றையவிலை 18, 20 என்ன கொடுமைசார் இது......

4மடங்கு அதிகம்.....

இந்த மாற்றம் கடைக்கோடி மக்கள் வரை பாதிக்கிறது.
அந்த மக்களுக்கு நகரங்கள் சார்ந்தே எந்த பொருளும் சென்றடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதனால் 1 ரூபாய்க்கு பண்ருட்டியில் வாங்கும் முருங்கைக்காய் விலை இங்கே 10 ரூபாய் இன்று
நேற்று 1 ரூபாய் இங்கே 3 ரூபாய்
ஆனால் நேற்று 1 ரூபாய்க்கு கிடைத்த பொருள் இன்று அவனுக்கு 1.20பைசா விற்கு சென்று சேருகிறது.
இதுதான் மாற்றத்திற்கான் முக்கியக்காரணம்....

மற்றுமொரு கொடுமை இவர்கள் செலவழிக்கும் காசு எல்லாம்
பண முதலைகளையே முழுதாய் சென்றடைகிறது..
பிட்ஸர கார்னர்களிலும்....
மல்டிபிளக்ஸ்களிலும்.....
ரிலையன்ஸ் பிரஸ்களிலும்...

எனவே உயர்ந்துவிட்ட விலைவாசி
சுமக்க வேண்டிய சுமை மற்றவர்கள் தலையில் ஏறிவிட்டது....
உள்நாட்டுக்குள்ளேயே இப்போது ஏற்றுமதி நடக்கிறது.

10ரூபாய்க்கு நம்மூரில் கிடைக்கும் அரிசியை வளர்ந்த நாட்டினவன் 20 ரூபாய்க்
கொடுத்து வாங்க தயாராக இருக்கிறhன் என்பதால் தானே ஏற்றுமதியில் கட்டுப்பாடு
விதிக்கிறேhம்...
என்றhல் உள்நாட்டுக்குள்ளேயே இப்படி ஒரு ஏற்றுமதி நடக்கிறது..
எப்படி சரிகட்டவேண்டும் என்று உட்காருந்து யோசியுக்கவேண்டுமே....

அமெரிக்க ஜனாதிபதிகள் நம்நாட்டுக்கு வந்தால் இதோ எங்கள் நாட்டு மக்கள் உலகம்
முழுவதிலும் முதலாவதாக வரும் அளவிற்கு மென்பொருட்கள் தயாரிக்கிறhர்கள் வருமானம்
பார்க்கிறhர்கள் என்று அவர்களையே கூட்டிக் கொண்டு காண்பித்தால் அவர்களுக்குத் தெரிந்த
நடுத்தர மக்கள் எல்லாம் சாஃப்ட்வேரில் சம்பாதிக்கும் கணவான்கள் தான்

இப்போது சொல்லுங்கள் புஷ் பேசியது தப்பா என்ன,
ஆனால் அந்த ஆள் பேசியது... உங்கள் நாட்டின் நடுத்தர மக்கள் வசதியாக வாழக் கற்றுக் கொண்டார்கள்
என்பதாகத் தான் துவங்கியது.... என்பதை நம்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் விளக்கிய போது நம்மால் புரிந்து
கொள்ளமுடிகிறது.

அரசியல் லாபத்திற்காகவும் தங்களின் பெயர்கள் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகவும்
பாஜக வும் காங்கிரஸும் மூடிமறைத்துவிட்டன... இதனைபேசாமல் ஏதேதோ பேசி விசயத்தை சப்பை ஆக்கிவிட்டன.
ஆனால் இந்த விசயத்தில் கம்யூனிஸ்டுகளின் மௌனம் தான் கேள்விக்குறியாக இருக்கிறது..

சினிமாக்காரன் பத்திரிக்கைக்காரனைவிட மேலானவன்


சினிமாவைப் பற்றிய அடிப்படை அறிவுகூ.ட இல்லாமல்
அதன் தொழில் நுட்பம் உட்பட அனைத்தையும்
பேசும் பத்திரிக்கைக்காரர்களைவிட சினிமாக்காரர்கள் மேலானவர்களே

சினிமா என்றால் என்ன...
அது பொழுதுபோக்கா?
வரலாறு சொல்லமா?
வாழ்க்கையை அப்படியே காட்டுமா
என்று நீங்கள் வகைபிரிக்காமல்
பேசுவதற்கு முன் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்குறீர்கள்

மாதக் கணக்கிலும் வாரக்கணக்கிலும்
காத்திருந்து பத்திரிக்கையில்
மக்கள் படிக்க வேண்டிய தலைப்பு செய்தி
நமீதாவுக்கு அகலமான மனசு......
சிம்புவின் லீலைகள் இது தானா
என்றாவது ஒருவாரமாவது சினிமாவினர் இல்லாத
அட்டைப்படம் வருகிறதா (இந்நாளில்)
இதில் விற்பனைக்காக அவர்கள் தவறு செய்கிறார்கள்
என்று நீங்கள் சினிமாவினை குற்றம் சாட்டக்கூடாது

பத்திரிக்கையில் இருந்து வந்த கனவான்களலெல்லாம்
எடுத்த படங்களை தமிழகம் அறியும்
உங்களுக்கான வேலைகளை உருப்படியாக செய்த
பாடில்லை இங்கே நீங்கள் செய்திருக்கும் மாற்றம்
என்ன தெரியுமா இந்த நடிகர் எப்போது அரசியலுக்கு?
அரசியலுக்கு வர நினைக்கும் ஒரிரு படித்த இளைஞர்களுக்கும்
அருவருப்பை ஏற்படுத்துவது அவர்கள் கதவை சாத்துவது

இந்தக் கட்டுரையின் நோக்கம் நீங்கள்
சினிமாவை சரியாக விமர்சியுங்கள் என்பதோ
வாத்தியார் போல உங்களை நினைத்துக்
கொண்டு மார்க் போட்டு மக்கு வாத்தியார்களாக
ஆகிறீர்கள் என்று சொல்வதோ...
பத்திரிக்கையின் பேரைக்கேட்டாலே
காத தூரம் ஒடும் மக்களிடம் நீங்கள்
ஏற்படுத்தி வைத்திருக்கும் மீப்பெரிய
மாற்றத்தை பற்றியோ இல்லை

தமிழ் சினிமா சத்தியமாக உலகத்தரத்திற்கு
வளரவில்லை என்பது கண்கூடு
ஆனால் அதனை வைத்துக் காசு பார்க்கும்
நீங்கள் என்றாவது ஒருமுறையாவது அதன்
வளர்ச்சிக்காக ஒருகட்டுரையேனும் வெளியிடுகிறீர்களா?
இந்நாட்களில் இதில் சினிமாப் பத்திரிக்கைகளையு சேர்த்தே

வரும் ஒன்றிரண்டு படங்களையும்
எட்டிக் கூட பார்ப்பதில்லை
உலகத்தரத்திற்கு அங்கீகாரம் பெரும்
ஒன்றிரண்டயும் பார்ப்பதில்லை

நமக்கென்ன மக்கள் எப்படிப் போனால்
நமக்கு காசு பார்க்க வேண்டும்
நமக்குத் தெரிந்தவரை வளர்த்துவிட வேண்டும்
சினிமா வளர்வதால் யாருக்கு என்ன
லாபம்.....
ட்ரூஃபோ என்னும் பத்திரிக்கைக்காரனின்
காலத்தில் அழியா அந்தக் கருப்பு
வெள்ளைப் படங்களையும்
அந்த மனிதன் ஏற்படுத்திய புதியஅலை(நியு வேவ்)
மட்டும் தான் சாட்சியாக இருக்கிறது

சினிமாக்காரர்களும் சினிமாவும்
உங்கள் நண்பர்களாகவும்
நட்பு வளையமாகவும் மாற்ற
கொஞ்சமாவது ஒரு ரசிகராயேனும்
உதவுங்களேன்
உங்களுக்கு கமலகாசனைப் பிடிக்காமலா
சிவாசியைப் பிடிக்காமலா
ரஜினியை எம்ஜிஆரைப் பிடிக்காமலா
குழந்தைப் பருவத்தை கழித்தீர்கள்
சினிமா வளரட்டும்....
நல்லபடியாக உங்கள் உதவியோடும்.....

Saturday, May 3, 2008

பீப் சாப்பாடு 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் ஆக்கிவிட்டார்கள்


விலைவாசி உயர்வை பற்றி ஏதோதோ பேசிக் கொள்கிறரர்கள்
நானும் தான் பேசுகிறேனே.. எனக்கு விலை வாசியினால் ஏற்பட்ட விளைவு

பீப் சாப்பாடு 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் ஆக்கிவிட்டார்கள்
ஒரு முட்டை விலை 2 ரூபாய் முட்டை அளவு இட்லி 2 ரூபாய்

நேரம் முடிந்தது மிச்சம் நாளை இந்த காசை சேமித்தாள் தான் ஏதாவது வாங்கமுடியும்

அவள் ஒரு கண்ணாடிப்பெண்


ஏன் எனக்கு கோபம் வந்தது
அவள் ஒரு கண்ணாடிப்பெண்
அவள் வீட்டுக்கு வேலைக்கு போயிருந்தேன்
முண்டாசுகட்டி மண்வெட்டி பிடித்து சிமெண்ட் கலவை கலந்தேன்
உன்னை பார்க்கவில்லையடா சத்தியமாக வேறெரன்றை பார்த்தேன்
எல்லாப் பெண்களைப் போலவே அவள் கண்களும் பொய் பேசியது

அவள் ஆயுதம் எதுவுமே இல்லாமல் எனக்குள் ஏதோ சின்னம்
கனப்பொழுதில் கட்டி முடித்துவிட்டால்
என் கற்பனை பல்லாக்கு உடனடியாக தூக்கிச் சென்றது.
சூரியனைச் ருசித்த என் உடல் வியர்வையாய் திகற்றியது.
என் உடல் தவித்தது
அவள் உள்ளம் தவித்தது
என் களைப்பை போக்க கருப்பட்டி கலந்து
காப்பித் தண்ணி கொடுத்தாள் அந்த கண்ணாடிப்பெண்
புது(த்)உணர்ச்சியுடன் வேலை செய்தேன்

அவள் தந்த காப்பித் தண்ணியால் அல்ல
அவள் கண்கள் தந்த காந்தப்புணர்ச்சியால்

எப்போதோ மறந்தவள் அன்று சாலையில் கண்டாள்
நலம் கேட்டாள் வெட்கத்துடன் சிரித்தாள்
கண்ணாடியை விளக்கி என்னை பார்த்தாள்
நான் இப்போது கம்யூட்டர் தொடும் ஊழியனாம்

பக்கத்தில் நின்றரள் என் தங்கை
வீட்டுக்கு வந்ததும் கிண்டளடித்தாள்
கண்ணாடி கண்ணாடி கண்ணாடி என்று
கோபத்தில் அவளை அறைந்து விட்டேன்
ஏன் எனக்கு கோபம் வந்தது.

Friday, May 2, 2008

நான் அவளை நிர்வாணமாக பார்த்து விட்டேன்.


இது என் நண்பனின் கதை

நாங்கள் எல்லாம் முண்டாசு கட்டி
மண் வெட்டும் கூலித் தொழிலாளர்கள்
எப்போதும் போலவே அன்றும் அங்கு
வேலைக்குப் போனோம் நானும் இருந்தேன்
நண்பனும் இருந்தான்...

பாவம் என்ன செய்வான் அவன்
காலையில் யார் சொல்லியும் கேட்காமல்
பஸ் பயணம் இருக்கிறதடா வேண்டாம்
பாட்டிக் கடை பணியாரம் என்று
எல்லோரும் சொல்லியும் கேட்காம்ல்
தின்னதன் விளைவு 11 மணிக்குத் தெரிந்தது

வீடுகட்ட அஸ்திவாரம் தோன்றும் வேலை
பாவம் அவன் அடிவயிற்றில் வலி தொடங்கிவிட்டது.
வீட்டின் முதலாளி ஏரியா ரவுடி...
மேஸ்திரியிடம் சொல்லிவிட்டு கழிப்பிடத்திற்கு வழி கேட்டான்
அனுபவசாலி எதிரே வரிசையாய் இருந்த அறைகளில்
அங்கே டிரம் ஒன்று இருக்கிறதே அதன் அருகில் உள்ள அறை என்றரர்.
அவசரத்தில் அவனும் இந்தப் பக்கமா அந்தப்பக்கமா என்று கேட்காமல்
ஒடிவிட்டான். வேலையை தொடர்ந்து கொண்டிருந்த எங்களுக்கு
அவன் அலறல் சத்தம் கேட்டது.

ஓடிப்போய் பார்த்தால் அறையிலிருந்து வெளியே வந்தான்
கன்னம் சிவந்திருந்தது அவசரமாய் ஓடிவந்தவன்
அடுத்த அறைக்குள் ஓடிவிட்டான்.

மாலையில் திரும்பும் போது தான் சொன்னான்
மச்சான் ஒரு 25 வயசு பொண்ணு குளிச்சிக்கிட்டுருந்துது
ஒடம்புல ஒட்டுத்துணி இல்ல... நானும் அவசரத்துல கதவ தள்ளுனதும்
திறந்துகிச்சு... அந்தப் பொண்ணு ஓ...ன்னு கத்திட்டா முகத்தை மறைச்சிக்கிட்டா
எனக்கு முச்சு பேச்சே இல்ல
குளிச்சிக்கிட்டு இருந்தா அந்த வீட்டோட கடைசி அறை போல
சத்தம் கேட்டதும்

ஒருத்தன் வந்தான்டா எம்மா மனுசனா அவன்
எருமை மாதிரி இருக்கான் அந்தப் பொண்ணு
உள்ள ஓடிப்போச்சு எனக்கு வேர்த்துப்போச்சு
என் சட்டைய புடிச்சான் விட்டான் ஒருஅறை
வாயி உளறுது... எங்கடா வேலை செய்றேன்ங்கறரன்.

நாயர் வீட்டுலன்னதும் தான் விட்டான்.
இல்ல கொன்னுறுப்பான். ஆனா ஒன்னு
மச்சான் ஒரு 10நொடி அப்பாடியோ....
இன்னும் நான் சுயநினைவுக்கு வரவே யில்லை......

Monday, March 31, 2008

ஏதேதோ பேசுறேன் வருந்தவே இல்லை


சல்லிப் பயகிட்டயும் மனசிறுக்கும்
சஞ்சலப்பட்டாதான் முகஞ்சுளிக்கும்
கோபம்வந்தா வெட்டிப்பய
சும்மா இருந்த சொம்பப்பய

ஏதா இருந்தா என்னத்தான்
எப்படி இருந்தா என்னத்தான்
கோபம் வந்தாலும் அடக்கிக்கிறேன்
சினிமா பத்திநாலும் பொருத்துகிறேன்.

ஏன்டானு கேட்டா சொல்லமாட்டேன்
ஏதோ கணக்கிருக்கு விளக்கமாட்டேன்
புத்தகம் படிச்சாத்தான் அறிவாளியா
குத்தம் இருந்தாலும் அறிவாளிதான்.

ஏதேதோ பேசுறென் வருந்தவே இல்லை
என்னோட சாதிசனம் திருந்தவே இல்லை
எழுத்தாளருக்கு தேவை எழுத்தின் வரலாறு
எடுக்காமல் போனல் யார் சொல்லுவார்


சேக்ஸ்பியர் காப்பியடித்ததையும்
கன்பியுசியஸ் கடந்து வந்த பாதையும்
அவர்கள் ஏராளம் பயணித்துவிட்டார்கள்
நம்மாட்கள் நான் புதிதாக கண்டுவிட்டேன்
என்று மார் தட்டுகிறார்கள்.

மீண்டும்
ஏதேதோ பேசுறென் வருந்தவே இல்லை
என்னோட சாதிசனம் திருந்தவே இல்லை

Tuesday, January 1, 2008

konjam mokka





lover:

hi this is true......so try to do it.......


student:

theriyalaina solli tharriya?


wife:

take care
eat well
enjoy film festivel da
i cant come this year ma
take care
bye tata


hai da take care
your self
thanniyanikkatha
ennaya vittutu

nalla sapdu enaku
miccham vaikkatha

enjoy pannu
but
but
amanthuratha

by friend