Friday, May 23, 2008

நீங்கள் பத்திரிக்கையாளராக வேண்டுமா?



1. தினந்தோறும் பத்திரிக்கை படிக்கவேண்டும்.
2. அரசியல் நடப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்
3. எழுத்தின் பலத்தினை அறிய இலக்கியத்தில் அறிவு வேண்டும்
4. எழுத்துக்களை பிழையின்றி எழுத இலக்கண அறிவு வேண்டும்.

மேற்கூறிய எதாவது ஒரு தகுதியிருப்பின் நீங்கள் பத்திரிக்கைக்கு லாயக்கு இல்லாத ஆள்....

1. செக்ஸ் விசயங்கள் கலந்தபடி உங்களால் எழுதத்தெரியவேண்டும்.(இலக்கணம் தேவையில்லை)

2. சினிமாக்காரர்களை ஜால்ஜா பண்ணி அவ்வப்போது பேட்டி எடுக்கத் தெரியுமா கூடவே அவர் பேசாத வார்த்தைகளையும் சேர்த்து அவர் திருப்பிக்கேட்டால் நீங்கள் தான் பேசினீர்கள் என்று சமாளிக்கத் தெரியவேண்டும் கூடவே அவரை அரசியலுக்கு இழுத்து வரவேண்டும்.

3. கொலைநிகழ்ச்சிகள் என்றால் போலிசுக்கே வராத கோணத்தில் உங்களுக்கு கேள்விகள் தோன்றவேண்டும். (அப்பாவிகள் என்றால் விட்டுவிட முடியுமா)

4. அவர்கள் சம்மதம் இல்லாமலே போட்டோ எடுக்கத் தெரியவேண்டும்.

5. மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விசயங்களை தேட வேண்டும்.

6. எந்த காரணம் கொண்டும் நீங்க நாட்டின் வளர்ச்சியை பற்றின கட்டுரைகளை எழுதக்கூடாது.

7. வெளிநாட்டுப் பத்திரிக்கையில் வேலை வேண்டுமென்றால் பிரபலமாக நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியையோ அல்லது நபரையோ பற்றி நீங்கள் ஊகிக்கும் செய்திகளை விரிவாக்கி பத்திரிக்கையை பெயர்வாங்க செய்திட வேண்டும்.

8. கவர்ஸ்டோரி என்றால் நமீதாவிற்கு எறும்புகடித்தது ஒரு எக்ஸ்குளூசிவ் டிப்போர்ட் என்பது போன்றோ அல்லது ஊழலில் சிக்கி சின்னாபின்னமான அரசியல் வாதியை பற்றியோ எழுதவேண்டும் அல்லாது போனால் மேற்கூறிய தலைப்பு சார்ந்தும் கவர்ஸ்டோரி எடுக்கலாம்.

தயாராகிவிட்டீர்களா...

உங்களுக்கு அருமையான வாழ்க்கை காத்திருக்கிறது..

1. போலிசுகாரரிடம் இனி லஞ்சம் அழுகத் தேவையில்லை
2. அரசாங்க அலுவலகங்களில் வேகமாக வேலைநடக்கும்.
3. ரெக்கமன்டேசனுடன் எந்த காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.
4. நடிகர்களை பேட்டி எடுக்கப் போனால் கவர் கிடைக்கும்.
5. கூடவே விற்பனைக்கு உதவிய வகையில் சம்பளம் அல்லாத வகையில் நீங்கள் எழுதிய முறைக்கு தக்கபடி காசு கிடைக்கும். (எ-கா) நமீதா எக்ஸ்குளூசிவ் -- ரூ.500 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வழி -- ரூ.100