Monday, May 26, 2008

நான் சத்தியமா இந்தியாவோட அரசியல்வாதி நம்புங்க..


ஒரு சீட்டுக்கேட்டா நிக்கவா உக்காரவானு நக்கலடிக்காதீங்க...

நான் உண்மையான அரசியல்வாதிதாங்க..
எனக்கு மார்க்ஸையும் தெரியாது ஏஞ்சல்சையும் தெரியாது
பாசிசமும் தெரியாது நாசிசமும் தெரியாது.
சேவையும் தெரியாது மாவோவையும் தெரியாது.
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

35% வாங்குனவங்க அதிகமக்களோட ஆதரவுல இருக்காங்க
ஆனா 50 சீட்டுதான்
26% ஆதரவோட இருக்குர நமக்கு 115 சீட்டுல
நாம எப்படி ஆட்சி செய்யலான்னு நான் கேக்கமாட்டேங்க
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

மாசத்துக்கு 50,000 ரூவா கவர்மெண்டு வசதி
வருசத்துக்கு 5,00000 ரூவா கவர்மெண்டு வசதி
அடிக்கிற காசுல 50% தலைவருக்கு
அடிக்கிற காசுல 20% மாவட்ட தலைவருக்கு
அடிக்கிற காசுல 10 சதவீதம் பகுதி தலைவருக்கு
மிச்சம் மீதி ஏதோ...
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு.

குரலெடுத்துக் கத்துனேன்னா நாலுகல்லு தாண்டிநிக்கிற
எருமைகூட அரண்டு போகும் பார்லிமெண்டலயோ சட்டசபைலையோ
கத்துனா எப்படி அருமையா இருக்கும் எனக்கு குஸ்தியும் தெரியுங்க
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

கட்சிக்காரனுக்கு கிடைக்காத காசு மக்களுக்கு எதுக்கு
அவனுக்கு கொழுத்த காசு கிடைக்கிற மாதிரியே நான்
ரெண்டு மூனு ரோசனை வச்சிறுக்கேன். அதையே திட்டமாக்கிருவோம்.
அப்பறம் எம்மயன் 700 மார்க் தான் வாங்கியிருக்கான்.
அமெரிக்கா போவனுமாம் ஐஐடில படிக்கனுமா எதாவது சட்டத்துல
இடத்தை ரெடிபண்ணனும்ல...
எம்பொண்டாட்டிக்கு அந்த தாஜ்மஹால பாக்கணும்னு கொள்ள ஆசை
நான் எம்.பி ஆயிட்டா பக்கத்துல தானே இருக்கு பாத்துட்டு வந்துருவோம்ல.
ஒரே ஒரு சீட்டுதானே...
இப்பவாவது ஒத்துக்கோங்க நான் இந்திய அரசியல்வாதின்னு

No comments: