Thursday, September 16, 2010

தேசிய விருதும் தமிழகமும்




விருதுகள் கலைஞர்களுக்கு முக்கியமான மரியாதை, அதிலும் சிறப்பு ஒட்டு மொத்த நாட்டிலேயே இந்த ஆண்டில் இவர்தான் இந்த தளத்தில் சிறந்தவர் என்று அறிவிக்கும் போது , விருதினை பெறுபவர் அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை. சினிமாவை பொறுத்த வரையில் இந்திய நாடு முழுவதும் பலமொழிகளில் சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக போட்டியிட்டு அதில் வெற்றி பெரும் போது பெறுகின்றவர் மட்டும் அல்லாது அந்த மாநிலமே பெருமையடைகிறது.

தேசிய விருதிணை பொறுத்த வரையில் தமிழ்நாடு மிகக்குறைவான அளவிலேயே விருதுகளை பெற்றிருக்கிறது.

நடிப்புக்கென
M.G. Ramachandran
Kamal Haasan மூன்று முறை
Vikram
Prakash Raj

நடிகைகள்
Laxmi
ஷோபா
Suhasini
Archana
Priyamani

இயக்குனர்கள்
Agathiyan
B. Lenin
Bala

நம்முடைய விருதுகளின் எண்ணிக்கை மிகக்குறைவே நம்மைவிட குறைந்த படங்களே செய்யகூடிய மலையாளமும் வங்காளமும் விருதுகள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது,

காரணம் தேடிபார்தொமேயானால் இது அரசியல் காரணங்கள் என்றோ ஒருதலை பட்சம் என்றோ ஒதுக்கிவிட முடியாது நல்ல பொருளுக்கு என்றுமே அதற்க்கான ஈடு வந்து சேர்ந்தேயாகும், அந்த வகையில் நம் உண்மையில் மிகக்குறைந்த நல்ல சினிமாக்களையே செய்திருக்கிறோம் .


நல்ல சினிமா என்றால் எது என்று விவாதிக்கப்பட வேண்டி இருக்கிறது. அதாவது தேசிய விருது தருவதற்கு முக்கியமான பிரிவுகள் 2 உள்ளன.

கலைப்படம்
ஜனரஞ்சக சினிமா


இதில் நாம் கலைப்படம் என்ற பிரிவில் செயல்படுவதே இல்லை உண்மையில் அது ஒரு சிறந்த வணிகத்தளம் மக்கள் தொகை மிகக்குறைவாக கொண்ட பல நாடுகள் கூட துணிந்து சினிமா எடுப்ப்து, இந்த சந்தையை வைத்துத் தான். இந்த மாதிரி படங்கள் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அதன் மூலமாக வருமானம் ஈட்டுகின்றன. ஒரு நாட்டினுடைய கலாச்சாரத்தை பரப்புவதற்கும் உண்மையான படைப்புத் திறனை உலகிற்கு காட்டுவதற்கும் இந்தப் படங்களே முக்கியமானதாக விளங்குகின்றன.

மலையாளிகளும் வங்காளிகளும் இந்த விசயத்தில் அறிவு நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள் அந்த சந்தையில் செயல்பட்டு பணம் ஈட்டுகிறார்கள். அது மட்டுமல்லாது உலக விருதுகளையும் வாங்குகிறார்கள். கலைப்படங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவை அந்த தளத்தில் கட்டாயம் செயல் பட ஆட்கள் தமிழில் வருங்காலத்தில் உருவாக வேண்டும்

இந்தக்குறைபாடுதான் நம்மை தேசிய விருதுகள் பட்டியலில் இடம் பெறவிடாமல் செய்கிறது. நம் தமிழில் இருந்து சிறந்த படங்களாக தேர்ந்தடுக்கப் பட்டவைகளில்
மறுபக்கம்
காஞ்சிவரம்

இரண்டிற்கும் மலையாளிகளே இயக்குனர்கள் என்பதை சுட்டிக்காட்டிகொள்கிறேன். தமிழில் இருந்து இந்த தளத்தில் செயல்பட கட்டாயம் ஆட்கள் வந்தாக வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாடு தேசியவிருதுகள் பட்டியலில் இடம் பெறுவது என்பது கனவானதாகவே போய்விடும்.

அடுத்தது ஜனரஞ்சக சினிமா இதுதான் மக்களை சென்றடைகூடிய வியாபார சினிமா, வெகுஜன சினிமா இந்தத் தளத்தில் தான் இன்று உலகமே கொண்டாடக்கூடிய நடிக, நடிகைகள் இயக்குநர்கள் உருவாகிறார்க்ள். ஆனால் இவர்கள் செய்யும் சினிமா பொழுதுபோக்கிற்கானது என சொல்லப்படுவது. எனவே இதனை இரண்டாம் பிறிவாகப் பிரிக்கிறார்கள்.

உண்மையில் காலிவுட் என்பது வெகுஜன சினிமாவில் முக்கியமான தளம் அங்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதும் வெகுஜன சினிமாக்களுக்கு உரியதே ஆனால் சிறந்த அயல்நாட்டு திரைபடங்கள் வரிசையில் வரும்போது மட்டுமே அங்கே ஒரு சில அயல்நாட்டு கலைப்படங்கள் விருதினை பெருகின்றன காரணம் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் அறிவு சார் திரைப்படங்களேயே அங்கே போட்டிக்கு அனுப்புகின்றன,

நமது நாட்டின் திரைப்படங்கள் அவர்கள் வரையறுக்கும் வரையரையின் படி (cinema is cineam this is formula of oscar formation) வட்டத்திற்குள் வருவது இல்லை. காரணம் நமது சினிமா இன்னமும் பாடல்கள் நிறைந்த படங்களாகவே வருகின்றன, அவற்றிலிருந்து நாம் இன்னமும் மீளவே இல்லை. அது எப்போது விடியும் என்று தெரியாது.

நம் மக்கள் அதற்கு பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை மனதில் கொண்டே நம் இயக்குநர்களும் மாறுதல்களுக்கு உட்படாமல் அப்படியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறேhம் மாற்றங்கள் வரும் என்று நம்புவோமாக நமக்கு இப்போதைக்கு ஆஸ்கர் கிடைக்காது(நி)

நமது தமிழகத்தை பொருத்த வரையில் ஜனரஞ்சக சினிமா பிரிவில் வெற்றி கண்டவர்கள் 3 பேர் மட்டுமே

விசு
விக்ரமன்
சேரன்

நல்ல பொழுதுபோக்கு சினிமாக்களை கட்டாயமாக நம்மால் உருவாக்க முடியும் ஆனாலும் நாமும் நம்முடைய பண்டைய கால தமிழ்ப்படங்களை தொண்றுதொட்டு 98 என்று தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியில் ஒரு தாத்தா இருக்கிறார் அவர்பேர் யாஸ் சோப்ரா, நமக்கு 1 வாங்குவதற்கே முக்குகிறது அவரின் படங்கள் மட்டும் 4 முறை வென்றிருக்கிறது, இன்னொருவர் இப்போது இந்த ஆண்டும் கூட வென்ற ராஜகுமார் கிரானி 3 முறை. அவர்களால் சாத்தியப்படும் போது ஏன் நம்மால் முடிவதில்லை முடியும் தேவையானதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை முக்கியமானது காப்பியடிக்கக்கூடாது.

விருதுகளின் பட்டியலைப் பார்க்கும் போது ஏற்படும் ஏக்கத்தை போக்கிக் கொள்ளவே இந்தக் கட்டுரை எழுதுகிறேன், இது என்னுடைய தனிப்பட்டக் கருத்து இதில் உங்களுடைய கருத்துக்களும் கட்டாயம் சேரவேண்டும் கருத்துக்களை மறுமொழியிட

எப்போது தமிழகத்திற்கு விருதுகள் குவியும்

ஏக்கத்தோடு

அன்பன்