Thursday, March 25, 2010

அனந்த விகடனில் மதனின் பொய்



மற்ற நாட்டின் கலாச்சாரங்கள் ஊடுருவும்போது நமது நாட்டின் கலாச்சாரங்கள் அழிந்துவிடுவதில்லை என்று சொல்லி இருக்கும் மதன் ஆர்யர்களின் கலாச்சாரங்கள் திராவிடர்களின் கலாச்சாரத்தை அழித்து விட வில்லை என்கிறார், திராவிட அடையாளங்கள் என்பது இன்று எங்கோ சில கல்வெட்டுகளிலும் மலை ஜாதியினரின் இடையேயும் குறிப்பிட சில கிராமங்களிலும் தான் இருக்கிறது, அவர்களின் சாப்பாடு, திருவிழா, ஏன் கடவுளே கூட மாறிபோஇவிட்டார் கந்தபுராணம் எங்கிருக்கிறது ராமாயணமும் மகாபாரதமும் தான் இருக்கிறது. திராவிடம் உடையில் மட்டும் கொஞ்சமாக ஒட்டிகொண்டிருகிறது. மலையாளமும், தெலுங்கும் தமிழ் தானே அது எந்த எழுத்துக்கள் எந்த உச்சரிப்புகள் சேர்ந்ததால் இப்படி மாறி இருக்கிறது... கலாச்சாரம் மொழிகளையே குடைந்து தொழைதிருகிறது.... திராவிட கலாச்சாரம் இருக்கிறதாம்...

Monday, March 15, 2010

எனக்கு பதில் சொல்லுங்கலேன்

ஒரு திரைப்பட மாணவனாக தமிழ் திரைப்படங்களை உற்று நோக்கும் ஒரு உதவி இயக்குனராக எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் ஒன்று தமிழ் திரைப்படங்களின் மீது உண்டாகிறது,

நல்ல சினிமா என்பது உங்கள் பார்வையில் எது, ஜனரஞ்சக சினிமாவகட்டும் ஆர்ட் சினிமாவாகட்டும் எதுவாகினும் சரி உங்கள் மேலான கருத்துக்களை தரும்படி வேண்டுகிறேன்....

நம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் என்று அறியப்படுபவர்கள் ஏனோ உலக அரங்கில் சிறந்த இயக்குனர்களாக அடையாளம் காணப்படவில்லை, ஒவ்வொரு வருடமும் வருகின்ற படங்களில் குறைந்த பட்சமான நிறைவுகள் கொண்டதாக கூட பலப் படங்கள் இருப்பதில்லை, இதில் கொஞ்சம் முன்னேற்றம் கொண்ட படங்களை தருபவர்கள் இங்கு சிறந்த இயக்குனர்கள் ஆகிறார்கள். திரைபடங்களின் மீது உண்மையான அக்கரையுடன் இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன், உங்களுடைய பதில்கள் கட்டாயம் எல்லோருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

நன்றிகளுடன்
சை. கௌதம்ராஜ்