Thursday, September 27, 2007

பெரியார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்

இட ஒதுக்கீடு குறித்து பெரிhரின் நிலைப்பாடுகளை படிக்க படிக்க, தமிழக மக்களுக்காக ஏன் கடைக்கோடியின் ஒரு மனிதனுக்காகவும் செயல்படவேண்டும் அரசாங்கம, என்பதில் நிலையாக இருந்தவர் பெரியார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில், தமிழ் நாட்டில் அரசின் திட்டங்கள் கடைக்கோடி கிராமங்களுக்கும் கொஞ்மாவது சென்று கொண்டிருக்கிறது என்றhல், அதற்கு முழுக்காரணம் அவர் எழுப்பிய இடஒதுக்கீட்டுக் குரல் தான். தமிழ் நாட்டின் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்துள்ளது. இது மகிழச்சி அளிக்கின்ற விசயமா? இல்லையா? பிந்தைய விவாதம். முதலில் சிறுபாண்மையினருக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது, என்று தொடுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கைப்பற்றி தான் இதில் குறிப்பிடுகிறேன்.
சிறு பன்மையினராக இருக்கும் தமிழக மக்களில் மேற்கூறிய மக்கள் மட்டும் கிட்டத் தட்ட ஒரு கோடி இருப்பார்கள். ஆனால், அவர்கள் இதுவரை தமிழ்நாட்டில் அரசியல் ரீதுயாக பெரிய பதவிகளை வகித்தாகவோ! இல்லை அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவோ! தெரியவில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்பண்டிகைளின் போதும், அத்தனை அரசியல் தலைவர்களும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று, தங்களை அவர்களின் நண்பர்களாக காட்டிக்கொள்கிறhர்களே ஒழிய ஒரு போதும் அவர்களுக்காக உழைத்தாக தெரியவில்லை. போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடும் அரசியல் வாதிகள், சொல்லும் கணக்குகள் நாங்கள் எவ்வளவு அவர்களிமிருந்து இவர்களுக்கு அதிகமாக செய்தோம் என்ற கணக்குகளில், சிறுபான்மையினருக்கு செய்ததில் சண்டையே வராது, காரணம் இருவருமே ஏதும் செய்யவில்லை. இப்போது அறிவிக்கப்ட்டடிக்கும் இந்த திட்டம் கூட, இந்த அராசாங்கத்தின் சிந்தனையில் ஒழித்த திட்டமில்லை மாறhக பக்கத்தில் இருக்கும் மாநிலம் செய்திருக்கிறது. அதற்கு வழியேற்பட்டால் நாங்களும் செய்வோம் என்றhர்களே ஒழிய தாங்களாக செய்து விட வில்லை. முன் குறிப்பிட்ட அந்த வழக்கை தொடுத்தவர் சாதி அடிப்டையில் பார்க்காதீhக்ள் என்று தொடுத்த வழக்கு சரியானது தான், என்றhலும் இன்றைக்கும் சென்னையில் வந்து பாருங்கள் பத்திரிக்கைகளில் வீடு வாடகைக்கு கிடைக்கும் விளம்பரங்களில் தாழத்தப்பட்ட இனத்தவராக இந்து சமூகத்தில் சித்தரிக்க படுபவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வீடு இல்லை என்று கொட்டை எழுத்துக்களில் எழுதிப்போட்டிருக்கும் வீடுகளை பார்க்க முடியும் தாழ்த்தபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட சிறுபான்மையினருக்கு வழங்கப்படததால் அவர்கள் சமூகத்தில் இன்னும் வளராமலேயே இருக்கிறhர்கள். அவர்கள் வளர்வதற்கு மதத்தின் பேரால் ஒதுக்கீடு வழங்குவதில் தப்பில்லை... பெரியார் என்னதான் பார்ப்பணர்களை எதிர்த்திருந்த போதிலும் அவர்களின் ஆதிக்கத்தை தான் முக்கியமாக எதிர்தார் எனலாம் அவர்கள் நம் சமூகத்தில் மூன்று சதவீதம் பேர் இருக்கிறhர்கள் அவர்களுக்கானதை கொடுத்தவிட வேண்டியது நியாயம் தான் என்று சொன்னார் பிறபடுத்தபட்டோர் களுக்கான இடஒக்கீட்டு மசோதாவின் போது ஏற்பட்ட போராட்டங்களில் ஒற்றுமொத்தமாக பார்ப்பணர்களுக்கு எதிராக கிளம்பியது குரல் ஆனால் அதிலும் அவர்களுக்கான இடம் இத்தனை சதவீதம் தான் என்று பிரித்துப் பேசியதுபோல ஏன் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட குறித்து யாரும் பேசவில்லை.. இந்தியாவில் சிறுபான்மையிருக்கு...ஏன் இப்படி அவர்களும் இந்திய குடிமக்கள் தானே

இட ஒதுக்கீடு குறித்து பெரிhரின் நிலைப்பாடுகளை படிக்க படிக்க தமிழக மக்களுக்காக ஏன் கடைக்கோடியின் ஒரு மனிதனுக்காகவும் செயல்படவேண்டும் அரசாங்கம் என்பதில் நிலையாக இருந்தவர் பெரியார் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் அரசின் திட்டங்கள் கடைக்கோடி கிராமங்களுக்கும் கொஞ்மாவது சென்று கொண்டிருக்கிறது என்றhல், அதற்கு முழுக்காரணம் அவர் எழுப்பிய இடஒதுக்கீட்டுக் குரல் தான் தமிழ் நாட்டின் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்துள்ளது. இது மகிழச்சி அளிக்கின்ற விசயமா இல்லையா பிந்தைய விவாதம் முதலில் சிறுபாண்மையினருக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று தொடுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கைப்பற்றி தான் இதில் குறிப்பிடுகிறேன்.


சிறு பன்மையினராக இருக்கும் தமிழக மக்களில் மேற்கூறிய மக்கள் மட்டும் கிட்டத் தட்ட ஒரு கோடி இருப்பார்கள் ஆனால் அவர்கள் இதுவரை தமிழ்நாட்டில் அரசியல் ரீதுயாக பெரிய பதவிகளை வகித்தாகவோ, இல்லை அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவோ தெரியவில்லை ஒவ்வொரு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்பண்டிகைளின் போதும் அத்தனை அரசியல் தலைவர்களும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று தங்களை அவர்களின் நண்பர்களாக காட்டிக்கொள்கிறhர்களே ஒழிய ஒரு போதும் அவர்களுக்காக உழைத்தாக தெரியவில்லை போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடும் அரசியல் வாதிகள் சொல்லும் கணக்குகள் நாங்கள் எவ்வளவு அவாகளிமிருந்து இவர்களுக்கு அதிகமாக செய்தோம் என்ற கணக்குகளில் சிறுபான்மையினருக்கு செய்ததில் சண்டையே வராது காரணம் இருவருமே ஏதும் செய்யவில்லை இப்போது அறிவிக்கப்ட்டடிக்கும் இந்த திட்டம் கூட இந்த அராசாங்கத்தின் சிந்தனையில் ஒழித்த திட்டமில்லை மாறhக பக்கத்தில் இருக்கும் மாநிலம் செய்திருக்கிறது. அதற்கு வழியேற்பட்டால் நாங்களும் செய்வோம் என்றhர்களே ஒழிய தாங்களாக செய்து விட வில்லை.

முன் குறிப்பிட்ட அந்த வழக்கை தொடுத்தவர் சாதி அடிப்டையில் பார்க்காதீhக்ள் என்று தொடுத்த வழக்கு சரியானது தான் என்றhலும் இன்றைக்கும் சென்னையில் வந்து பாருங்கள் பத்திரிக்கைகளில் வீடு வாடகைக்கு கிடைக்கும் விளம்பரங்களில் தாழத்தப்பட்ட இனத்தவராக இந்து சமூகத்தில் சித்தரிக்க படுபவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வீடு இல்லை என்று கொட்டை எழுத்துக்களில் எழுதிப்போட்டிருக்கும் வீடுகளை பார்க்க முடியும் தாழ்த்தபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட சிறுபான்மையினருக்கு வழங்கப்படததால் அவர்கள் சமூகத்தில் இன்னும் வளராமலேயே இருக்கிறhர்கள். அவர்கள் வளர்வதற்கு மதத்தின் பேரால் ஒதுக்கீடு வழங்குவதில் தப்பில்லை...
பெரியார் என்னதான் பார்ப்பணர்களை எதிர்த்திருந்த போதிலும் அவர்களின் ஆதிக்கத்தை தான் முக்கியமாக எதிர்தார் எனலாம் அவர்கள் நம் சமூகத்தில் மூன்று சதவீதம் பேர் இருக்கிறhர்கள் அவர்களுக்கானதை கொடுத்தவிட வேண்டியது நியாயம் தான் என்று சொன்னார் பிறபடுத்தபட்டோர் களுக்கான இடஒக்கீட்டு மசோதாவின் போது ஏற்பட்ட போராட்டங்களில் ஒற்றுமொத்தமாக பார்ப்பணர்களுக்கு எதிராக கிளம்பியது குரல் ஆனால் அதிலும் அவர்களுக்கான இடம் இத்தனை சதவீதம் தான் என்று பிரித்துப் பேசியதுபோல ஏன் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட குறித்து யாரும் பேசவில்லை.. மதங்களின் அடிப்படையில் செய்ய வேண்டாம் யாரும் இந்தியாவில் சிறுபான்மையிருக்கு...ஏன் இப்படி அவர்களும் இந்திய குடிமக்கள் தானே


Wednesday, September 26, 2007

MNCக்களை விட மோசமானவர்கள் நம் நாட்டு நடிகர்கள்....


ஒரு காலத்தில் விடுதலைக்காக அந்நியர்களை விரட்டுவதற்காக நம் முன்னோர்கள் பட்ட பாடுகளும் பெற்ற அடிகளும் சொல்லி அடங்காதது. அந்நியர்கள் நம் நாட்டை விட்டு போன பின்னரும் இன்றும் பிளாட்பாரத்தில் வசிப்பவர்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பலரும் (கிட்டத்தட்ட 30சதவீதம் என்கிறது ஆய்வு) இருந்து கொண்டு தான் இருக்கிறhர்கள் அதற்கு காரணம் நமது சினிமா. இந்திய மக்கள் தொகையில் பணக்கார வரிசையில் முதல் 34 பேர் வைத்திருக்கும் பணமும் எஞ்சிய 110 கோடி மக்களிடமும் இருக்கும் பணமும் ஒரே அளவு இதற்கும் காரணம் சினிமா தான்....

சினிமா செய்த கவர்ச்சியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஆட்சி மாற்றமே வந்தது. அந்த அளவிற்கு மக்களின் மனங்களில் பதிந்து போன சினிமா நடிகர்களின் சுயநலமே மேற்கூறிய அத்தனைக்கும் காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்திய மண்ணில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு MNCயும் எந்த பெரிய நட்சத்திரத்தை நாம் பயன் படுத்தலாம். நமக்காகவே காத்துக் கொண்டிருக்கிறhர்கள், அங்கே நடிகர்கள். நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்கள் மிகவும் பாடுபடுவார்கள் என்பதாய் தான் அவர்கள் இங்கே வருகிறhர்கள் நம் நாட்டின் சொத்தை அடுத்த நாட்டுக்கு கொடுக்கும் நடிகர்களுக்கு இந்தியாவில் கோவில், ரசிகர் மன்றங்கள்.

இது காலம் காலமாக சொல்லியாகிவிட்டது மறைமுகமாக இதனை செய்து கொண்டிருந்த நடிகர்கள் இப்போது நேரடி எம் என் சி க்களாக மாறிவிட்டார்கள். அது தான் அயல் நாட்டில் பாடல் எடுப்பது... உலகத்தில் தனிநபர் வருமானங்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகளின் முக்கியத் தொழில் சுற்றுலாவாத்தான் இருக்கும். உதாரணம் சுவிட்ச்சர்லாந்து, பிரேசில் அந்த நாடுகளிளெல்லாம் மற்ற நாட்டினரைக் கவர தங்கள் நாட்டு நடிகர்களைக் கொண்டு விளம்பரப் படம் உண்டாக்கி உலகத் தாரை வரவேற்கின்றனர். ஆனால் நம் நாட்டிலோ கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் தரும் காசுகளை அயல்நாடுகளில் கொட்டி அவர்களது பொருளாதாரத்துக்கு வளர்ச்சி ஏற்படுத்தி தருகின்றனர் நமது நடிகர்கள்.


ஒரு படம் எடுக்கும் செலவில் இன்று ஒரு பெருந்தொகையை பாடல்களுக்காக ஒதுக்குகினறர். அவற்றை வெளிநாட்டில் போய் கொட்டிவிட்டு வந்தால் தான் நமது ரசிகர்களுக்கு சாந்தமென்று நமது நடிகர்கள் தான் தீர்மானிக்கிறhர்கள். இப்போது போதா குறைக்கு கம்போசிங் என்ற பெயரில் வெளிநாடு பறப்பது. எப்படி நம் காசுகளை வெளிநாட்டுக்கு கடத்தலாம் என்று வழி தேடுகிறhர்கள் ஒரு வருடத்திற்கு வரும் 100 படங்களில் 10 படங்களின் பட்ஜெட் மற்ற 90படங்களின் பட்ஜெட்டுக்கு சமம் அந்த பத்து படத்தை பற்றித்தான் பேசுகிறேன். அவர்கள் செய்வது தான் இவ்வளவும்... வடஇந்தியாவை பொறுத்த வரை குட்டி நட்சத்திரம் கூட விளம்பரதிற்கு வந்து விடும் ஆனால் தென்நாட்டில் உள்ள நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பது குறைவே சூர்யா, மாதவனைத் தவிர.



இங்கே வரவேற்க வேண்டிய ஒரு விசயம் நடக்கிறது. அது சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் இருவரும் எந்த எம் என் சி விளம்பரங்களிலும் நடிப்பதில்லை இவர்கள் இருவரும் முறையே பெப்ஸி, ஹீரோ கோன்டா விளம்பரங்களில் நடித்திருந்த போதும் மீண்டும் அவர்களை நடிக்கச் சொன்ன போது ஏற்க மறுத்துவிட்டடார்கள் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் படங்கள் நஷ்டமடைந்த போது அவர்கள் வந்து கேட்ட போது மறுத்திருக்கிறhர். எல்லா நடிகர்களும் இப்படி மாறுவார்களா என்ன?


அவர்களுக்கு மேலைநாட்டு கலாச்சாரத்துக்கு தானே மாறுவார்கள்(நாடு மாறிகளாக)


MNCகளாக.....


இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளிலும் மக்களின் வாழ்க்கை முறை வளராமல் இருப்பதற்கு அவர்கள் பொறுப்பேர்பார்களா?

Tuesday, September 25, 2007

கேமராவின் கண்கள் கட்டழகி ஒரு(க)த்தியின்....காமப்பார்வை போல.....

சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.
சாலையெல்லாம் நிரம்பி வழிந்தது கூட்டம்
சூரியன் யாரிடம் சொல்லாமல்
தாக்கிவிட்டு வியர்வைத் துளிகளில்
தாகம் தனித்துக் கொண்டிருந்தது......(Establish)

சட்டையின் உள் வரை போய்
புழுக்கத்தில் வேகமாய் வேர்த்தது.
பக்கத்தில் உள்ள யாரையும் நான்
பார்க்கவில்லை காரணம் என்(inter)

கண்களை அடைத்துக் கொண்டு
எதிர் பாதையில் நடந்து வந்தவள்.....?
எனக்கு ஏன் அவளையே பார்க்க வேண்டும்
பதில் எல்லாம் தெரியவில்லை...(action)

நெருக்கடியாய் நின்ற மக்கள் கூட்டத்தை
தொட்டேன் தொடர்ந்தேன் என்னை அறியாமல்
பக்கத்தில் நடந்த அத்தைகள் மீது மோதி
பாவைகள் எதிராய் மறித்து வசைபாடிவிட்டு(reaction)

அவளை நோக்கி என் புறமிருந்து
அந்தபுறம் போனேன் யார் சொல்லியிருப்பார்.
மன்மதன் ஒருவன் மயங்கி வருகிறhனென்று
சிட்டாய் பறந்து விட்டால் அந்த கணம்..(tension)

அந்தவளின் குட்டி றெக்கையை பார்க்க
பக்கத்தில் இருந்த மாடியில் ஏறிவிட்டேன்
வெயில் என்னை பார்க்காமல் மறைந்து
நிழலாய் என்மேல் பாய்ந்துவிட்டு
அவளை கட்டிக்கொண்டு நின்றது.(built-up)

அதோ போகிறhள் அவள் அவளுக்குவேர்வை
தாவணியில் துடைக்கிறhள்
நெற்றியில் இட்ட மை அவள் விரலிலும்
அவளின் கருப்பழகின் ரகசியம்
இப்போது தான் புரிந்தது எனக்கு
சூரியனே நீ தான் மகா கில்லாடி(resolution)

சூரியன் நகர்வில்-lighting
மாடிக்கு ஒடியதில்-crane
long shot...
Extream long shot....
close-up...
mid shot....
எல்லாம் தெரிகின்றதா கேமரா கட்டழகி எனக்கேதோ காட்டுகிறhள்! இப்போதும் எனக்கு. உங்களுக்கும் காட்டுகிறhளா என்ன?

ஐயர் வால் சினிமாவும்.... அழிந்து போன திராவிடமும்....

தமிழ் சினிமா தோன்றிய காலம் தொட்டு இன்று வரை, தமிழ் நாட்டின் உயர்ந்த நாகரிகமாக சொல்லப்பட்டு வருவது பிராமண கலாச்சாரம். ஊமைப்படத்தில் கீசகவதமாகிய அந்த முதல் சினிமா முதல், உலகத்தை திருத்துகிறேன் என்று சொல்லும் இன்றைய சங்கர் வரை குடியான மக்களை சோம்பேறிகளாகவும் தவறு செய்பவர்களாகவும் சுட்டிக் காட்டுகிறதே ஒழிய பிராமணர்களுடனான ஒப்புமைக் காட்சிகளில் மற்றவர்கள் தலைகுனிந்து நிற்கும் படியே அமைக்கப் பட்டிருக்கிறது.
பிராமணர்களை காட்டிய சினிமாகள்:
சினிமா என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகம், ஒரு படத்தில் இது தான் நமது மக்களின் வாழ்க்கை நிலை என்று காட்டும் போது அது பார்ப்பவர்களின் அடி மனத்தில் ஆழப் பதிந்து போகிறது. உலக மக்கள் பார்க்க வாய்க்கும் போது, தமிழர்களது நாகரிகம் குறைவானது என்றும், இவர்கள் சோம்பேறிகள் என்றும் தான் உலகத்தார் அறிந்து கொள்வார்கள். இதில் வருந்ததக்க விசயம் என்ன வென்றhல், பிராமணர்கள் அல்லாதவர் இயக்கிய படங்களிலும் அவர்கள் சினிமாவில் பிராமண கலாச்சாரம் உயர்ந்தது என்பதாய் தான் சொல்லி சென்றிருக்கிறhர்கள். சொல்லிக் கொண்டிருக்கிறhர்கள். அதற்கு காரணமும் சினிமாதான், அவர்களது அடி மனதில் முந்தைய சினிமாக்கள் விதைத்திருந்த அந்த வேசத்தை தான் வெளிக் கொணர்ந்திருக்கிறhர்கள். அது தான் சினிமாவின் தாக்கம்.
பிராமணர்களை மையப் படுத்தி வந்திருக்கும் சினிமாக்களிளோ இன்னும் ஏகலோகம். பிராமணர்கள் பலரை நாயகர்களாக கொண்ட நாவல்கள் தான் தமிழகத்தில் ஏக பிரசித்தம் ஜெயகாந்தன், பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி....... கணக்கில் அடங்காது அவ்வளவு எழுத்தாளர்களும் பிராமணரை எழுதாத நாவலாசிரியரே இல்லை எனும் அளவிற்கு எழுதியாகிவிட்டது. ஆனால், அவர்களிடத்தில் குறைந்த பட்சமான ஒரு உண்மையிருந்தது. திஜ வை பார்க்கும் போது அவர் அவருடைய சமூகத்தில் இருந்த பல விசயங்களை அப்பட்டமாக காட்டினார். ஆனால் சினிமாக் காரர்கள், நாவல்களிலிருந்து சினிமாக்கதைகளை எடுத்துக் கொண்ட போதும் கூட சினிமாவாக்க எடுத்துக் கொண்டதெல்லாம் எப்படியெல்லாம் பிராமணர்களை கொண்டாடலாம் என்பதாக இருந்திருக்கிறது.
இது தொடர்ந்து நீட்டிக்க கூடாது என்பது தான் எடுத்துக் கொள்ளவேண்டிய பொருள் காரணம் பல வற்றைக் கூறலாம்.
இஸ்லாம் சமூகத்தை சொல்லும் போது, அவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்ற தாக்கத்தை எவ்வளவு அழகாக அத்தனை மக்களின் மனதிலும் ஏற்படுத்திவிட்டது.n இப்போது வந்திருக்கும் சிவாஜp படத்தில் படத்தின் கதை ஒட்டத்தில் ஆயிரம் குறையிருக்கிறது, உலகத்தில் நடக்கும் விசயத்தை லாஜpக் மாறhமல் காட்டுகிறேhம் என்ற சாயத்தை பூசிக்கொண்டு நான் பெரிய இயக்குநர் என்று சொல்லிக் கொள்ளும் சங்கரின் மனதிலேயே முஸ்லீம்கள் தீவிர வாதிகள் என்று காட்டும் படி ஆகிவிட்டதே அப்படி என்றhல் சராசரி மக்களின் மனதில் பதிந்திருப்பதில் குற்றம் சொல்ல முடியாது, அதற்கும் அப்பட்டமான காரணம் சினிமா. நடப்பதைத் தானே காட்டுகிறேhம் என்பது சப்பைகட்டு நடப்பதையெல்லாம் காட்டிக் கொண்டுதான் இருக்குறீர்களா? என்பது அவர்களுக்கு பதிலான கேள்வி
பிராமணர்கள் காட்டிய சினிமா
சினிமா தோன்றிய காலம் தொட்டே பரவத்துவங்கிய ஒரு விசமான விசயம் புராண சினிமா, நாடகத்திலிருந்து சினிமா வந்ததும் ஊமைப்படங்களில் புரிய ஏதுவாக நாடகக் கதைகளை படங்களாக்கினர். அது முதல் ஊமைப்படத்தில் தொடங்கியது கீசக வதம், திரௌபதி வஸ்திராபரணம் என்று நீண்டது படப்பட்டியல். சமூகப் படங்களாக உருப்பெற்ற பேசும்படக் காலத்திலும் அத்தனையிலும் பிராமணர்களின் வாழ்க்கையும் கடவுள்களை பூஜpக்கும் மக்களின் வாழ்க்கையையும் காட்டி சினிமா புதிய மறுமலர்ச்சியை தேவையில்லாத மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. பெரியாரின் வருகையின் போது அவர் தலைதலையாய் அடித்துக் கொண்டது தயவுசெய்து குடியானவர்களே நீங்களும் அவர்களின் சினிமாவை செய்யாதீர்கள் என்று......... கேட்கவில்லை எந்த சினிமா முதலாளியும் கேட்கவில்லை எந்த இயக்குனரும் விளைவு.....
இன்று திராவிடர்களின் பூர்விகமும் கலாச்சார முறையும் அவர்களது வரலாறும் பண்டிகையும் அவர்களது வாழ்க்கை முறையும் மறந்து போய் எல்லோருமாய் திருப்பதி உண்டியலை நிரப்பவும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடவும் செய்த அதி புரட்சியை செய்திருக்கிறhர்கள் பிராமண அறிவாளிகளும் இயக்குநர்களும். மறந்து போன திராவிட வரலாற்றை யார் சொல்லி கொடுக்க போகிறhர்கள் திராவிடர்களுக்கு எதன் மூலம் சொல்லிக் கொடுக்க போகிறhர்கள் அதே சினிமாவாளா.... கொஞ்சம் நெஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் திராவிடத்தையேனும் காப்பாற்றினாள் சரி. அந்த ஆறு ஜhன் முழம் எல்லாம் தாண்டி இன்னும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. யாருக்காவது நீச்சல் தெரியுமா......

Monday, September 17, 2007

குறியீட்டு சினிமா

சினிமா என்னும் நவீன இலக்கியத்தில் எழுதுவதற்கு இன்னும் 100 சதவிகதம் மிச்சமிருக்கிறது. ஒரு புத்தகத்தில் எழுதக்கூடிய கதை சினிமா ஆகிவிடுமன்றhல், அந்த சினிமா உண்மையான சினிமா இல்லை. உண்மையான சினிமாவின் கதையை எந்த புத்தகத்திலும் எழுதுவிட முடியாது. அது ஒளியில் வரையும் பூச்சி போல, அதன் இறக்கைளையும் அங்கங்ளையும் பறக்கும் பாவனைகளையும் சுட்டுவிட, கேமராவுக்கு அதிக கற்பனைகளை கடந்த உண்மை தெரிகிறது. காட்சிகளின் ஊடாக கவர்ந்திழுக்கும் விசையிருக்கிறது. உணர்ச்சி இருக்கிறது.
எழுத்துக்களை படித்துக் கொண்டிருக்கும் போது, எப்போது வேண்டுமானாலும் அந்த புத்தகத்தின் காதை மடக்கி வைத்துவிட்டு இன்னொரு நாள் படித்துக் கொள்ளலாம். ஆனால், சினிமாவில் முழுக்க காட்டியே ஆக வேண்டும் பார்வையாளன் பார்த்தே ஆகவேண்டும். பார்ப்பவனை பூஜpத்தே ஆகவேண்டும் படைப்பாளிகள். அவனுக்குள், எதைகாட்டி எப்படி காட்டி நிறுத்தி வைத்து அவனை பூஜpப்பது.
சினிமாவின் குறியீடு உண்மையில் யாருக்காகவும் எழுதபட வேண்டுமா? இல்லை சினிமாவை குறியீடாக காட்ட வேண்டுமா? உண்மையில் பொறுமையாக பார்த்திருக்கும் ரசிகனின் வாழ்க்கையையை காட்டும் குறியீடாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
ஹிட்ச்காக் சொல்வார் உண்மையில் மக்களிடம் வெற்றி பெறுபவர்கள், ஜனரஞ்சக பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் தான், அவர்கள் தான் மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து வைத்திருக்கிறhர்கள் என்று. உண்மை தான், ஆனால் அதிகம் பேர் படிக்கும் பத்திரிக்கை என்பதற்காக அது நல்ல பத்திரிக்கை என்று எப்படி சொல்லி விட முடியுமா? ஒரு நாளில் அதிகமாக விற்பனையாவது மது பானம் என்றhல் அது நல்ல பொருளா?
ஒரு மக்களின் குறியீடாக அவர்களின் வாழ்க்கையை ஒரு சினிமா பிரதிபளிக்கின்ற போது அது ஏன் இவ்வளவு பொய் சொல்ல வேண்டும், குறிப்பாக நம் தமிழ்நாட்டில்.
உண்மையைக் காட்டினால் அது சினிமாவுக்கு இயல்பாக இருக்காது என்பது தகுந்த வாதம், அது உணர்த்தபட்டிருக்கிறது. ஆனால், அந்த முழுமையான குறியீட்டை பொய்மையாக வேணும் எழுத வேண்டும் அவர்கள் தான் தொழில் வல்லுநர்கள். அதற்காக பொய்யயே செய்யும் நம் தமிழ் சினிமாவைச் சொல்லவில்லை. ஒரு குறியீட்டு முறை பார்ப்பவர்களையே குறியீடாகக் காட்டுவது அதாவது பார்வையாளனை. ஆனால், நம் மக்களின் குறியீட்டுச் சினிமாவை நான் இன்னும் பார்த்தாக நினைவில்லை. பசி படத்தில் தமிழனும் தெலுங்கனும் கலந்த ஒரு உண்மையினை உணர்ந்திருக்கிறேன். அது நல்ல குறியீட்டுச் சினிமா என்று நினைவு.( தமிழ் சினிமாவை பொறுத்தவரை.)பாரதிராஜhவின் படங்களில் அது இருப்பதாகவே தோன்றுகிறது.
ஸ்வீடனைச் சேர்ந்த இங்மார் பெர்க்மேனுடைய படங்களில், ஒரு குறிப்பிட்டக் காட்சியை விளக்குவதற்கு அதற்கு தகமான வேறெhரு காட்சிசை காட்சி உணர்த்துவார். நிறைய பேர் அவரது சினிமா ஏற்கனவே மிகவும் ஸ்லோ சினிமா, அதிலும் அவர் காட்சிகளை புரிய வைக்க ஒப்புமை காட்டி வேறு குழப்புகிறhர் என்று சொல்வர்கள். ஆனால் காட்சிகளை ஒப்புமை படுத்தி எடுக்கபட்ட அந்த நாட்களின் அந்த சினிமாதான், இன்றைய கவிதை சினிமாவான கொரியன் மற்றும் சீன திரைபடங்களின் மூலமானது... காட்சி குறியீடானாலும் சினிமா குறியீடானாலும் சுகமாகவே முடியம் சினிமாவுக்கு.....
சினிமாவில் குறியீடு அவசியம்....

Monday, September 10, 2007

சினிமாவும் நிர்வாணமும்

சினிமாவில் நிர்வாணம் அவசியமா? இல்லையா? என்ற கேள்வி, பல வருடங்களாக தமிழ் சினிமா படைப்பாளிகளிடம் கனமான விவாதமாக இருந்து வருகிறது. இந்த கட்டுரை அவ்விவாதம் சரியா? இல்லை தவறh? என்று விவாதிக்கப் போவதில்லை.....
காரணம், நான் நல்ல தொழில் நுட்பக் கலைஞனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். என் பார்வையில், நிர்வாணம் சினிமாவில் காட்டப்படும் போது என்ன விதமான உணர்வைத் தருகிறது என்பதை மட்டுமே பேசுகிறேன்.
நிர்வாணத்தைக் காட்டுவது அழகியலா? இல்லையா? என்று கேட்டால், பிறகேன் சினிமா கற்றுக் கொடுக்கும் கல்லுhரிகளில் நிர்வாணப் புகைப்படக்கலை என்று ஒரு பாடம் வைக்கப்பட்டிருக்கிறது, என்று எளிதாக பதில் சொல்லிவிட முடியும். அது சரியாக இருக்காது.
ரித்விக் கடாக்கிடம் ஒருமுறை கேட்கப்பட்ட கேள்வி.. யாதெனில், ஏன் நம் திரைக் கலைஞர்கள் நிர்வாணம் சம்மந்தமாக அதிகம் விவாதிக்கிறhர்கள்! அதற்கு அவர் சொன்ன பதில் அதனைக் கொண்டு நிறைய பணத்தை மக்களிடம் கொள்ளையடித்துவிடலாம் என்றhர். உண்மையில் நம் நாட்டினர் அவ்வாறு தான் நிர்வாணத்தை நாடுகின்றனர். நிர்வாண விசயத்தில் புத்தகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே ஆரோக்கியமற்ற விவாதம் பேசப்படுகிறது. புத்தகத்தில் எவ்வளவு அருமையாக நிர்வாணத்தை விவரிக்கிறhர்கள், ஆனால் சினிமாவில் சொன்னாள் மட்டும் கோபம் வருவானேன். இது சினிமாக்காரர்களின் வாதம்.
பேசும் படம் மௌனப்படத்தைவிட எதையோ இழந்திருக்கிறது , உண்மையில் மக்களின் சிந்தனை மழுங்கடித்து அவர்களின் கற்பனைகளை நமக்குள் தினிக்கிறhர்கள். சாப்ளின் சொன்னது இந்த வார்த்தைகள். உண்மைதான் சினிமாவ மக்களின் உணர்வுகளில் பாய்ந்து நேரடிப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. சினிமா என்னும் உணர்வுகளை பாய்ச்சும் ஊடகத்தில் நிர்வாணம் காட்டப்படும் போது.... என்னென்ன விளைவுகளைத் தருகிறது என்பதற்காக சில படங்களை எடுத்துக் கொள்கிறேன்..
முதலில் மூன்று வகை தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்
1, உணர்வுகளைத் துhண்ட
2, சொல்ல வேண்டியதை மறைமுகமாக சொல்ல
3, குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் உச்ச நிலையை சொல்ல
1. உணர்வுகளைத் துhண்ட
நேரடியாக பொருள் கொள்ளலாம் (உதாரணம் நீலப்படங்கள்)
2,சொல்ல வேண்டியதை மறைமுகமாக சொல்ல
நம் நாட்டு சினிமா தான் இதற்கு உதாரணம்(இந்தியா)
அதே பொருள் வர ஆனால் மறைத்தே, அந்த கருத்தை அதற்கு தகமான வேறு காட்சிகளின் மூலம் உணர்த்துவது.
3.குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் உச்ச நிலையை சொல்ல படங்களை இதற்காக இரண்டு படங்களை எடுத்துக் கொள்கிறேன்.
titanic
starmaker
இதில் titanicயை பொருத்தவரை அதில் வரும் நிர்வாணக் காட்சியானது , இப்படி ஒருத்தன் தன்னை பார்த்தான் என்பது தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவனுக்குத் தெரிந்தால் தன்னை வெறுத்துவிடுவான், என்று காட்டுவதற்காக கையாளப்பட்டிருக்கும் அந்தக் காட்சியை பார்க்கும் போது யாருக்கும் காம உணர்வு தோன்றhது (அது கையாளப்பட்டிருக்கும் விதத்தில் அழகியல் மேலோங்கி இருக்கும் i wish kamaron).
இதில் மற்றெhரு படமான star maker ல் தன்னுடைய வறுமை நிலையை சொல்லியும் அவன் தன்னை நடிகை ஆக்க மறுக்கிறhனே, என்னை எடுத்துக் கொண்டு சினிமாவில் நடிகையாக்கு என்று தன்னை நிர்வாணப்படுத்தி காட்டுகிறhள் நாயகி. சினிமா, உலகத்தில் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, என்று சொல்ல இந்த நிர்வாணக்காட்சி மிகச் சிறந்த அடையாளம். அது கையாளப்படாமல் இருந்திருந்தால், மிகப்பெரிய இழப்பீடாகவே இருந்திருக்கும் சினிமா மொழியின் உச்சகட்டம் பேசப்படாமலே போயிருக்கும்(குசாபே டொர்னாடோவை பாராட்டாமல் இருக்க முடியாது இந்த காட்சியை பார்க்கும் எந்த திரைக் கலைஞனுக்கும்)
குறிப்பால் கடைசியாக சொன்ன வகையறhக்களை சொல்லியிருக்க முடியும். ஆனால் அழகியல் காணாமல் போயிருக்கும்....... அழகியல் காணாமல் போயிருக்கும் உச்சகட்டம் புரியாமல் போயிருக்கும்.
என் தனிப்பட்ட கருத்து:
நிர்வாணம் மிகச்சிறந்த அழகு நான் ஒவ்வொரு நாளும் குளியலரையில் என் நிர்வாணத்தை பார்த்து என் முழு உருவையும் ரசித்துக் கொள்கிறேன் நான் . (ஒவ்வொரு மனிதனும் நான் தான்)
ஆடையின்றி நிற்கும்
மரங்களுக்கு நடுவே
நான் மட்டும்
நிர்வாணமாக வெட்கி
தலைகுனிந்து ஆடைகளோடு
பின் குறிப்பு
நடிகைகளை வேசிகள் என்று சொன்னாள் பெரிய விவாதமே நடக்கிறது இங்கே பத்திரிக்கை விற்பனை அமோகப்படுகிறது. உண்மையில் அவள் ஏன் அப்படி ஆகிறhள் என்பதற்கு உண்மைகாரணத்தை தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்கள் star maker திரைப்படத்தை பாருங்கள்.

Saturday, September 8, 2007

தங்கர்பச்சானும் தமிழ் சினிமாவும்

தமிழனை திருத்தமுடியாது.. என்று வார்த்தைக்கு வார்த்தை தமிழர்களை திட்டும் நமது தங்கர். தான் ஒரு நல்ல தமிழன், தமிழனுக்காக போராட, தமிழனுக்காக குரல் கொடுக்க தமிழனின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்ட தனக்கு இங்கே யாரும் ஆதரவு தருவதில்லை, என் நெருங்கிய நண்பர்கள் கூட என்னையும் என் சினிமாவையும் வெறுக்கிறhர்களோ! என்ற பாணியில் ஆனந்தவிகடனுக்கு பேட்டி தந்திருக்கிறhர். தமிழருக்கு இவ்வளவு கொடுமையா என்று மக்கள் ஆதங்கபட வேண்டுமா? இல்லை இவர் படத்தை இனிமேல் நாம் பார்க்க வேண்டும் என்ற உறுதி மக்களுக்குள் ஏற்பட வேண்டுமா எதை நினைத்து அவர் இப்படி பேட்டி தந்திருக்கிறhர் என்ற தெரியவில்லை. என் படத்தை அடிமக்களுக்காக எடுத்தால் அவர்கள் சண்டை படம் பார்க்கப் போய்விடுகிறhர்கள். படித்தவர்கள் எல்லாம் என் படத்தை விரும்புகிறhர்கள் என்பதாய் அவர் சொல்லியிருக்கிறhர்.
இந்த பேட்டியின் மூலம் தன் படத்தில் தவறிருக்கிறது என்று தானே பொறுப்பேற்கிறhர் போலும். எனக்கு நினைவிருக்கிறது ஒரு முறை எழுத்தாளரும் இயக்குனருமான ஓருவரை சந்திக்க நேர்ந்த போது அவரிடம் தங்கரின் படங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார் அவர் பேசும் அளவிற்கு அவர் திரைபடங்கள் தரமில்லாமல் இருக்கின்றன என்று. நான் உண்மையிலேயே தங்கரை நல்ல கலைஞர் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் சினிமாவில் மேற்கண்டவர் சொன்னதுபோல தவறிருக்கிறது.
நீங்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு முன்னாள் நாம் நம் தமிழ் மக்களுக்கு சென்றடையும் அளவிற்கு சரியாக செய்திருக்கிறேhமா? என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம் தமிழ் கலாசாரத்தை என்று சொல்ல முடியாவிட்டாலும் தேவர் சமுதாய ஆதிக்கத்துடனான கலாச்சாரத்தை எவ்வளவு தௌpவாக் காட்டியிருந்தார் பாரதிராஜh. ஏன் இன்று வந்திருக்கும் வசந்த பாலன், அமீர் ஆகியோரும் கூட நல்ல படியாகத் தான் தங்கள் பணியை செய்கிறhர்கள். ஆனால் தங்கர் செய்ததென்ன கலாச்சாரத்திற்கான நல்ல கதைகளை எடுத்துக்கொண்டு அதில் விற்பனை முலாம் ஒன்றை பூசி, நீங்கள் தேடும் தமிழ் மக்களுக்கும் இல்லாமல் கொஞ்சம் தமிழ்நாட்டைத் தாண்டி கூட கலாச்சாரம் பரப்பும் திரைப்பட விழாக்களுக்கும் செல்வதில்லை அவருடைய படைப்புகள். (தமிழனின் கலாச்சாரம் தெரியவில்லை) காரணம் அவர் சினிமாவில் தரம் இல்லை முதலில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்பது என் கருத்து நீங்கள் ஒரு நல்ல படைப்பாளி என்று அவருக்கு சொல்லத் தோன்றுகிறது. தங்கர் அவருடைய டெக்னிகல் அறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்து நல்ல கதை சொல்லும் திறன் பiடைத்த நீங்கள் உலக அளவிற்கு தமிழ் மக்களின் கலாச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்(மீண்டும் நினைவுப் படுத்துகிறேன் திரைக்கதை கொண்டு செல்லுதல் உளவியல் தொழில் நுட்பத்தில் வருகிறது).
தமிழ் மக்கள் ரசிக்கும் படியான படமாக, அழகியைப் போல மீண்டும் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறhர்களோ என்று அவர் பேசிய வார்த்தைகள் கொஞ்சம் ஆழமாகவே எனக்குள் பதிந்தது, காரணம். அழகி நல்லபடமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. விற்பனையிலிருந்து ஒதுங்க நினைக்கிறேன் என்பதாய் பேசும் நீங்கள் காலாச்சாரங்களை துல்லியமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்... மிகக் குறைந்த செலவிலும் அதே நேரம் நேர்த்தியான கதையாடலாலும் சிம்பிள் கேமரா மூமன்ட்ஸ் என்று நாம் சொல்லும் அசைவில்லா கேமரா நேர்த்தியையும் பயன் படுத்தி கட்டுப்பாடான அவர்கள் சமூகத்தையும் காட்டிக் கொண்டிருக்கும் ஈரான் தேசத்தை நிமிர்ந்து பாருங்கள் .
உங்களின் வடதமிழக மக்களின் வாழ்க்கை முறையை, பேச்சு வழக்கை ஒரே ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் உண்மையான வாழ்க்கை முறையோடு அது வெற்றியடைய வேண்டும் என்ற கனவு கண்டுகொண்டு இயக்காதீர்கள். இது என் மக்களின் சினிமா என்று மட்டும் நினைத்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்...(உங்கள் சினிமாவில் அப்பகுதி மக்களின் பேச்சு வழக்கு மிகச் சரியாக சித்தரிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்ற சப்பைக் கட்டு தேவையில்லை- உங்கள் படத்தில் குற்றம் இன்னும் நிறைய இருக்கிறது.)
for reference:அப்பாஸ் கிராஸ்தமி, மெக்மல்லப், ஹhனா மெக்மல்லப், சமீரா மெக்மல்லப், மஜத் மஜதி

Thursday, September 6, 2007

உலகத் தர சினிமாவே தமிழில் வருக...... வருக... எங்கள் தமிழ் நாட்டிற்கு

நம் தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கான அடையாளமே இல்லாமல் திரைப்படங்கள் வருவது வருந்தத்தக்கது. உலகிலேயே மொழி அடிப்படையில் மிக உணர்ச்சி கொண்ட மக்கள் நாம் தான் இதில் சந்தேகம் யாருக்குமில்லை. ஆனால் நம்முடைய சினிமாக்களோ அந்த தகுதி எதுவுமே இல்லாமல் இருக்கிறது. உலகத்தில் நம் தமிழகத்தை விடவெல்லாம் குட்டி குட்டியாய் உள்ள பல நாடுகள் உலகம் போற்றும் சிறந்த படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது , ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் இத்தனை ஆண்டுகளில் ஒரு சினிமாக் கூட உலகத்தின் பார்வைக்கு சென்றடையவில்லை(காப்பியடித்த சினிமாக்களை விட்டு, உண்மையான தமிழ் கலாச்சாரத்தோடு மிகைப்படுத்தாமல் வந்த சினிமாக்கள் ). காரணம், தமிழ் சினிமா நாடகத்திலிருந்து வந்தது என்று சொல்லும் சப்பை கட்டு வார்த்தைகள் சரியானதாக எனக்கு தோன்றவில்லை.

நான் காரணமாக கருதுவதுனிமாவில் தமிழரின் வாழ்க்கை காட்டப்படுவதில்லை என்பது தான்(சமூகநிலை):

உலக சினிமாக்களாக நாம் போற்றும் பல படங்களிலிருந்த அவை உலகத் தரம் அடைய சமுக சூழல் எப்படி காரணமாக இருந்தது என்பதற்காக இந்தியாவின்,

சத்யசித்ரேவுனுடைய - பதேர் பாஞ்சாலி

விக்டேரியா டி சிகா- பைசைகிள் தீவ்ஷ்

அக்கிரா குரோசோவா- செவன் சாமுராய்

ஸ்பீல்பர்க்- ஈடி

சிசிலி பி டிமிலி- டென் கமான்ட் மென்ட்ஸ்

ஆகிய படங்களை வைத்து ஆராய்கிறேன்.

இந்த படங்களை எடுக்க காரணம் மேற்கண்ட படங்கள் ஒவ்வொன்றும் பேரலல், சைன்ஸ்பிக்ஸன், மெயின் ஸ்ட்ரீம் ஆகிய முன்று வகைகளைச் சார்ந்தது. இப்படங்கள் உலகம் போற்றவும், வியாபார வெற்றியடைந்ததாகவும் உள்ளன, என்பதால் இவற்றை எடுக்கிறேன். அதனடிப்படையில் இவற்றில் இருக்கும் சமுக நிலையை பார்த்தோமானால் பைசைகிள் தீவ்ஸ் பதேர் பாஞ்சாலி ஆகியவை ரியல் டைமை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. என்றhலும், அவற்றில் வறுமையின் தன்மையும் அதன் பின் வாழும் மக்களின் வாழக்கை நிலையும் மிகத்தௌpவாக எடுத்துக் காட்டப்படுகிறது. பதேர் பாஞ்சாலியில் பக்கத்துவீட்டில் திருடும் அந்த பெண்ணின் நிலை முலமும் பைசைகிள் தீவ்ஸ் தன் பொருள் கிடைக்காமல் போக பதிலுக்கு திருடிவிட்டு நடுத்தெருவில் தன் மகனின் முன்னாள் அடிவாங்கி கூனி குறுகும் தந்தையுமாய் , இவர்கள் வழிகளில் அச்சமுக மக்களின் வாழக்கை முறை அப்பட்டமாக வெளிப்படுகிறது.

டென் கமாண்ட் மென்ட்ஸ் தான் இன்றைய ஹhலிவுட்டின் பிரமாண்ட சினிமாவிற்கு முதல் ஆரம்பம் அந்த வகையில் பென்ஹர் முதல் இன்றைய கிளாடியேட்டர் வரை அவ்வகை சினிமாக்களிலும் அந்தக் கதைக்குண்டான, மக்களின் வாழக்கை நிலை சரியாவே வெளிப்பட்டிருக்கின்றன. ஏன் அவர்களுடைய அறிவியல் சார்புபடங்களான மிக மிஞ்சிய கற்பனை படங்கள் ஈடி முதல் இன்றைய அனிமேஸன் படங்கள் வரை, இவை உண்மையிலேயே நடக்கின்றதோ என்பது போன்ற மாயையை(illution) மிகத்துள்ளியமாக காட்டிவிடுகின்றன.. ஆனால் நம் தமிழ் சினிமாவில்.....

ஈரான்காரர்கள் வெறும் சிறுவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு, கட்டுப்பாடான அந்த சமுகத்தில் உலக அளவிற்கு தங்கள் படைப்புகளை எடுத்து செல்கிறhர்கள்... ஏன் கொரியர்கள் காதலைச் சொல்வதில் கவிதையாய் தீட்டும் அவர்கள் படத்தை பார்த்ததும் ஒஹேh.. அவர்களின் வாழ்க்கை நிலை இப்படித்தான் இருக்குமோ என்று சொல்லி விட முடியும். இவ்வளவு ஏன் நம்மை விட விற்பனையிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவே உள்ள மலையாள திரையுலகில் நியூஸ் பேப்பர் பாய் முதல் இன்றைய ஹீரோயிச சினிமாக்கள் வரை அவர்களின் வாழ்க்கை முறையை அழகாக வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

ஆனால் நமது தமிழ் சினிமா என்ன செய்கிறது.

ஆவணப்படங்களின் தந்தை எனப்படும் பிளகர்டியினுடைய நானுhக் ஆப் எர்த் திரைப்படம், மனித வாழ்க்கையை ஆவணப்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை வெளிப்படுத்தியது. அவருடைய வருகையை ஏற்றுக் கொண்ட சினிமா மக்களின் வாழ்க்கை நிலை அவசியம் என்பதை உலகம் முழுவதும் பரப்பியது. புனுவல், கொடார்ட், ட்ரூபோ என்று அத்தனை பேரும் அவர்களிடைய சினிமாவை எங்கள் மக்களைக் காட்டுகிறேhம் என்கிறhர்கள். ஆனால் நம்மிடத்தில் மட்டும் ஏன் அந்த அது இல்லாமல் போனது கண்டிப்பாக இதற்கு பத்திரிக்கைகாரர்களும் ஒரு வகையில் காரணம்.

ஆனால் நமது தமிழ் சினிமா எதனைக் காட்டுகிறது...

பாரதிராஜh செல்வராஜ; போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தமி்ழ் மக்களை காட்டியதாக தெரியவில்லை. அவர்களும் கூட விற்பனை பூச்சு என்ற தங்களைத் தாங்களே ஏமாற்றி அந்தப் படங்களையும் ஏக்கப்பட வைத்து விட்டனர். தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று பேசும் இயக்குனர்களோ தமிழ் மக்களுக்கு கருத்து சொல்லி அரசியல் முலாம் தேடுகின்றனர். எப்போது தான் உலகம் தமிழனின் வாழ்க்கையைப் பார்ப்பது. இல்லை ரசினிகாந்தும், விசயகாந்தும், விசயும் நடித்த படங்களைக் காட்டி தமிழ் மக்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது என்ற காட்டப் போகிறேhமோ நம் வருங்கால தலைமுறைக்கும் உலகத்திற்கும், உலக சினிமாக்களைக் காட்டி காப்பி அடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதலோ, தொழில் நுட்பந்தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்களை மறைத்து இந்த சினிமாவிலிருந்து காப்பியடித்தார்கள் என்று சொல்லி அவர்கள் சினிமாவை அதி மேதாவிகளாக விமர்சனம் செய்தோ... சினிமாவை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு அவர்களின் வளர்ச்சிக்கு சிறிதும் பாடுபடாத பத்திரிக்கைக்காரர்களோ நினைத்தால் நல்ல சினிமா வர வாய்ப்பிருக்கிறது இல்லாவிட்டால் இன்னும் பத்தாண்டுகள் கழித்து என்னை மாதிரியே யாராவது ஒருவர் இதே மாதிரி உதாரணம் காட்டி (சிம்பு தனுசு விசால் பேர்கள் அடிபடலாம் பத்தாண்டுக்கு முன்னாள் என்னைப் போல யாராவது எழுதியிருக்கலாம் அது நான் இல்லை..) உலகத் தரத்திற்கு தமிழ் சினிமா வளர அதிக பிரசிங்கியாக பேசிக் கொண்டிருக்கலாம்.

உலகத் தர சினிமாவே தமிழில் வருக...... வருக...

எங்கள் தமிழ் மக்களின் அடையாளம் காட்டி

மற்ற மக்களின் வாழ்க்கையில் திடுடிய

தொழில் ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

(நாங்கள் இந்திய நாட்டின் உயர்ந்த தொழில் நுட்பவாதிகள் என்று சொல்லிக் கொள்வதால்)

புதிய முயற்சிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.......



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Wednesday, September 5, 2007

சினிமாவின் கேமரா கண்களுக்கு இலங்கைத் தமிழர்களின் கலாச்சாரம் கிடைக்கவில்லை
சினிமாவின் வரலாற்றுப்பக்கங்களைப் புறட்டும் போது, பிரான்சும் அமெரிக்காவும் சமகாலத்தில் வளர்ந்தாக சொல்கிறது. ஏன் போரட்ட நிலையில் இருந்த போதும் கூட தங்களுகளுக்காக பயன்படுத்தி வளர்ச்சி கண்ட ரசியாவையும் ஜெர்மனியையும் இன்னும் இத்தாலி, சுவீடன் என்று நல்ல வளர்ந்த நாடுகள் பலமான ஆயுதமாக திரைப்படத்தை மாற்றிக் கொண்டன. தங்களுடைய வளர்ச்சிக்கும் பக்குவமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் பயனாக வாசிப்புப் பழக்கம் இல்லாத பலரை திரையில் வாசிக்க வைக்க முயன்ற ட்ருபோ,கொடார்ட். விக்டோரியா டி சிகா, என்று ஆரம்பித்து இன்று சினிமா, உலகின் பல இடங்களிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இதற்கு ஆதாரம் ஈரான், கொரியா போன்ற நாடுகளில் இன்று நல்ல சினிமா வளர்ந்து வருகிறது.
இதனால் உலகத்திற்கு கிடைத்த ஒரே நன்மை உலகத்தின் எக்கோடியின் மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்வதே கிட்டத்தட்ட வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை பிறக்கவும், ஏன் ஆவணப்படுத்தப்பட்ட நானுhக் ஆப் த எர்த் என்ற படம் இக்லுhக்கலின் (பனிவாழ் மக்களின்)வாழ்க்கையைக் கூட சொல்லிவிட்டது. ஆனால் காலனி ஆதிக்கத்திற்கு கீழ் இருந்து மீண்டு புத்துயிர் பெறுவதற்குள் ஏற்பட்ட பெருந்துயரால், இலங்கை என்ற வைர பிரதேசத்தின் அவ்வாழ் மக்களின் வாழ்க்கையும் பாரம்பாரியமிக்க கலாச்சாரமும் காணாமல் போய்விட்டது.
கிட்டத்தட்ட இப்போது உலகம் முழுவதும் வந்தடைந்துவிட்ட மெல்கிப்சனின் அப்பகலிப்டோ வரை அமெரிக்கப்படங்கள் அவர்கள் இல்லாத மற்ற நாட்டைய மற்ற இனத்தைய மக்களை படம் பிடிக்கவே செய்திருக்கிறhர்கள். அதற்கும் இலங்கையில் வக்கற்று போய்விட்டது. காரணம் யாவரும் அறிவோம். மலேசியா முதல் சிங்கப்பூர் முதல் பிரேசில் வரை பிரிட்னிபியர்சு முதல் சோபியா லாரன்சு வரை வெங்கா பாய்சிலிருந்து உள்ளுர் ராக் வரை அத்தனையயையும் பயன்படுத்தி எங்கள் ஊருக்கு வாருங்கள் எங்கள் ஊருக்கு வாருங்கள் என்று இல்லாததையும் உருவாக்கி கூவி கூவி வித்துக் கொண்டிருக்கிறhர்கள் உல்லாச பயணத்தை. ஆனால், இலங்கை இயற்கை தந்த மாபெரும் கொடை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலையில் மேற்படி பிரச்சினை மற்றும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரத்தில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும், கேமராக்களை துhக்கிக் கொண்டு அழகியலைத் தேடி அலையும் கண்களுக்கு விருந்தாகி இலங்கை எப்போதோ வளர்ந்திருக்கும் சுவிட்சர்லாந்து எனும் நாடு தான் உலகிலேயே மிகப் பணக்கார நாடு என்பது எல்லோரும் அறிந்திருக்கலாம் அங்கு வசிக்கும் குடிகளுக்கு ஆண்டொன்றின் சராசரி வருமானம் மட்டும் 42000 ருபாய்க்கும் அதிகம். அதன் முக்கியத் தொழில் சுற்றுலா. அந்நியச் சலாவணியின் மதிப்பால் இன்று அந்த நாடு அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறது. ஆனால் நம் இலங்கை கேமராவின் கண்களுக்கு நம் கலாச்சாரம் வேறு மாதிரியாகத் தான் தெரிகிறது. பணக்கார அகதிகள், ஏழை அகதிகள் என்று தரம் பிரித்து வகைபார்த்து அலைக்கழிப்பதை ஆவணப்படுத்தவும் தலையங்கம் கிடைக்குமா என்று காத்துக் கொண்டு சிவப்பு நிற டின்ட் ஏறிய நிலையிலான பகுதியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன உண்மையான கலாச்சாரம் காலச்சக்கரத்திற்கு மட்டுமல்ல எல்லோரையும் போன்ற திறமையும் திறமையையும் புராதண கலாச்சாரத்தையும் இயற்கை அன்னையின் மடியையும் கொண்டிருக்கும் நம் நிலத்தை நோக்கிய நம்முடைய சிந்தனையோடு கேமரா கண்களும் மகிழ்ச்சி நாளை சூட்டுச் சத்தம் நிற்கும் அந்த நாளை சுடக் காத்திருக்கிறது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது