Thursday, May 22, 2008

புஷ்பேசியதில் சத்தியமாக தப்பில்லை அத்தனையும் உண்மை


இங்கே தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் தவறhன ஏற்றுமதிக் கொள்கைகள் காரணமாகத்தான் இந்த உயர்வு என்று
எதிர்க்கட்சிகள் வாதாடுகின்றன.

உண்மையில் இது உள்நாட்டுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றத்தின் விளைவு

*கடந்த சில ஆண்டுகளில் மட்டும் உயர்ந்துள்ள விமானப்பயணிகளின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி.

இந்தியாவின் பெருநகரங்களில் வளர்ந்துவிட்ட மென்பொருள் நிறுவனங்களும் மேலும்
out sourcing காரணமாகவும் ஒரு குறிப்பிட்ட சாரார்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது
பெரும்பாலான கார், செல்போன் கம்பெனிகளின் டார்கெட் இவர்களே
இவர்களின் வருமானம் அதிகமாகிவிட்ட காரணத்தால் இவர்கள் அதிக விலை கொடுத்து நல்ல
பொருட்களை வாங்க தயார் ஆக இருக்கிறhர்கள் இது மற்றவர்களை பாதித்ததோடு பொருளாதாரத்திலும்
பாதிப்பை கொண்டு வந்துவிட்டது.

1000 மதிப்பு வீட்டிற்கு 4000 கொடுக்க அவர்கள் ரெடி
2ருபாய்க்கு தயாராகும் தேநீர் 3 ரூபாய்க்கு வாங்கவே நமது பொருளாதாரம் இடம் தரும்
3 ரூபாய்க்கு தயாராகும் தேநீரை 15 ரூபாய் கொடுத்து வாங்குகிறhர்கள் அவர்கள்.

இதனால், 1000 ருபாயக்கு வாடகைக்கு இருந்தவன் இன்று 4000 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.்வாடகைக்கு இருந்தவன் 4000த்தை சரிக்கட்ட காய்கறிக்காரனாகவும், வேறு எந்த வியாபாரியாகவும் இருந்த போதும் விலையை உயர்த்துகிறhன். 5 ரூபாய்க்கு கிடைத்த இளநீர் சென்னையில் இன்றையவிலை 18, 20 என்ன கொடுமைசார் இது......

4மடங்கு அதிகம்.....

இந்த மாற்றம் கடைக்கோடி மக்கள் வரை பாதிக்கிறது.
அந்த மக்களுக்கு நகரங்கள் சார்ந்தே எந்த பொருளும் சென்றடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதனால் 1 ரூபாய்க்கு பண்ருட்டியில் வாங்கும் முருங்கைக்காய் விலை இங்கே 10 ரூபாய் இன்று
நேற்று 1 ரூபாய் இங்கே 3 ரூபாய்
ஆனால் நேற்று 1 ரூபாய்க்கு கிடைத்த பொருள் இன்று அவனுக்கு 1.20பைசா விற்கு சென்று சேருகிறது.
இதுதான் மாற்றத்திற்கான் முக்கியக்காரணம்....

மற்றுமொரு கொடுமை இவர்கள் செலவழிக்கும் காசு எல்லாம்
பண முதலைகளையே முழுதாய் சென்றடைகிறது..
பிட்ஸர கார்னர்களிலும்....
மல்டிபிளக்ஸ்களிலும்.....
ரிலையன்ஸ் பிரஸ்களிலும்...

எனவே உயர்ந்துவிட்ட விலைவாசி
சுமக்க வேண்டிய சுமை மற்றவர்கள் தலையில் ஏறிவிட்டது....
உள்நாட்டுக்குள்ளேயே இப்போது ஏற்றுமதி நடக்கிறது.

10ரூபாய்க்கு நம்மூரில் கிடைக்கும் அரிசியை வளர்ந்த நாட்டினவன் 20 ரூபாய்க்
கொடுத்து வாங்க தயாராக இருக்கிறhன் என்பதால் தானே ஏற்றுமதியில் கட்டுப்பாடு
விதிக்கிறேhம்...
என்றhல் உள்நாட்டுக்குள்ளேயே இப்படி ஒரு ஏற்றுமதி நடக்கிறது..
எப்படி சரிகட்டவேண்டும் என்று உட்காருந்து யோசியுக்கவேண்டுமே....

அமெரிக்க ஜனாதிபதிகள் நம்நாட்டுக்கு வந்தால் இதோ எங்கள் நாட்டு மக்கள் உலகம்
முழுவதிலும் முதலாவதாக வரும் அளவிற்கு மென்பொருட்கள் தயாரிக்கிறhர்கள் வருமானம்
பார்க்கிறhர்கள் என்று அவர்களையே கூட்டிக் கொண்டு காண்பித்தால் அவர்களுக்குத் தெரிந்த
நடுத்தர மக்கள் எல்லாம் சாஃப்ட்வேரில் சம்பாதிக்கும் கணவான்கள் தான்

இப்போது சொல்லுங்கள் புஷ் பேசியது தப்பா என்ன,
ஆனால் அந்த ஆள் பேசியது... உங்கள் நாட்டின் நடுத்தர மக்கள் வசதியாக வாழக் கற்றுக் கொண்டார்கள்
என்பதாகத் தான் துவங்கியது.... என்பதை நம்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் விளக்கிய போது நம்மால் புரிந்து
கொள்ளமுடிகிறது.

அரசியல் லாபத்திற்காகவும் தங்களின் பெயர்கள் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகவும்
பாஜக வும் காங்கிரஸும் மூடிமறைத்துவிட்டன... இதனைபேசாமல் ஏதேதோ பேசி விசயத்தை சப்பை ஆக்கிவிட்டன.
ஆனால் இந்த விசயத்தில் கம்யூனிஸ்டுகளின் மௌனம் தான் கேள்விக்குறியாக இருக்கிறது..

2 comments:

Anonymous said...

பிரச்சனையின் ஆரம்பமே சிதம்பரம் அமெரிக்காவை குறை கூறியதில்தான் ஆரம்பித்தது.அவன் நாட்டில் விளையும் சோளத்தை அவன் எப்படி வேண்டுமாலும் உபயோகப்படுத்துவான். அதை பயோடீசல் தயாரிக்கிறான் எனக் கூப்பாடுபோட நீ யார்?

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டு ஆகியும் உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு காண முடியாமல் இருப்பதற்காக சிதம்பரம் போன்ற அரசியல்'வியாதிகள் தான் வெட்கித்தலை குனிய வேண்டும்.கூடவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் இனப்பெருக்கம் செய்து இன்புற்றிருக்கும் இந்திய மக்களும் வெட்க்கப்படவேண்டும்.

களப்பிரர் - jp said...

//தைப் பற்றியும் கவலைப்படாமல் இனப்பெருக்கம் செய்து இன்புற்றிருக்கும் இந்திய மக்களும் வெட்க்கப்படவேண்டும்.//

அட பாவமே .... அதுக்கும் வேட்டு வச்சிடீங்களா .... நம்ம பசங்களாவது நம்மள கப்பதுவாங்க னு ஒரு நப்பாசைல பண்ணுறான்... பாவம்... அதுக்கும் வேட்டு வைக்குறீங்க